குடும்பத்தின் நிதிநிலையை பக்காவாக அமைத்துக்கொள்வது எப்படி?

குடும்பத்தின் நிதிநிலையை பக்காவாக அமைத்துக்கொள்வது எப்படி?

குடும்பத்தின் நிதிநிலையை பக்காவாக அமைத்துக்கொள்ள நிபுணர்கள் தரும்  சூப்பர் ஆலோசனைகள்:

*உங்கள் மாதசம்பளத்தின் முப்பது விழுக்காட்டை உங்களது குடும்ப செலவுகளுக்காக கட்டாயம் ஒதுக்குங்கள்.

*நீங்கள் மாதாமாதம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள்,திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை போன்றவற்றுக்காக உங்களது சம்பளத்தின் அடுத்த முப்பது விழுக்காட்டை ஒதுக்குதல் அவசியம்.

*உங்களது சம்பளத்தின் அடுத்த 30% ஐ உங்களது எதிர்கால சேமிப்புக்காகவும்,முதலீடுக்காகவும் ஒதுக்குங்கள்.

 

*மீதமிருக்கும்  10% வருமானத்தை பொழுதுபோக்கு, விடுமுறை சார்ந்த செலவுகளுக்காக ஒதுக்குங்கள்.

*உங்களது குடும்பத்திற்கு ஆகும் ஆறுமாத செலவுகளுக்கான பணத்தை  “அவசரகால நிதி” என்கிற பெயரில் தனியாக ஒதுக்கி வையுங்கள். அந்தப் பணம் வைப்பு நிதி, மியூச்சுவல் பண்ட் போன்ற வடிவங்களில் இருக்கலாம்.

*சொந்தமாக வீடு வாங்குகிறீர்களா? கணவன்,மனைவி இரண்டு பெயரின் பெயரிலும் வீட்டுக்கடன் வாங்குங்கள். அப்பொழுதுதான் அவை சார்ந்த வருமானவரி விலக்கை இரண்டு பேருமே பெற முடியும்.

*முதலீடு என்கிற பெயரில் இரண்டாவதாக வீடு வாங்குவது புத்திசாலித்தனமான முடிவு அல்ல. இப்படி செய்வதால் பெரியதாக ஒன்றும் வருமானம் உயரப்போவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

*குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் போன்றவை இருப்பதால் நாற்பத்தியைந்து வயதுக்கு மேல் நிறைய பணம் போட்டு சொத்துக்கள் எதையும் வாங்காதீர்கள். கையில் கொஞ்சம் பணத்தை வைத்திருங்கள்.

*கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வங்கியில் கூட்டாக கணக்கு  வைத்துக்கொள்ளுங்கள். இருவருக்குமே இது மிகவும் பாதுகாப்பானது.

*மிகமிக முக்கியமான விஷயம், கணவன், மனைவி இருவரின் பெயரிலேயே சொத்துக்கள் பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள் இருவரது காலத்திற்குப் பிறகே அது குழந்தைகளிடம் சென்று சேர வேண்டும். அதற்கு ஏற்ப பத்திரத்தை கவனமுடன் பதிவு செய்யுங்கள்.

*எந்த ஒரு முதலீட்டிலும் அதற்கான வாரிசுதாரர் யார் என்பதைக் குறிப்பிட மறக்காதீர்கள்.

*நிதி சார்ந்த எந்த ஒரு முடிவையும் உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் எடுக்காதீர்கள். அதேபோல வருமானவரியை மிச்சப்படுத்தும் நிதி சார்ந்த திட்டங்களை முன்கூட்டியே அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள்.

*உங்கள் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டை எடுத்து வைத்துக்கொள்ள ஒருபோதும் மறக்காதீர்கள். எதிர்பாராமல் கதவைத்தட்டும் மருத்துவச் செலவுகளுக்கு கைகொடுப்பவை மருத்துவக் காப்பீடுகள்தாம்.

*உங்களது வருமானவரியை நேர்மையாக செலுத்துங்கள்.அதே சமயம் எந்தெந்த நேர்மையான வழிகளில் எல்லாம் வருமானவரியை மிச்சம் பிடிக்கலாம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.

*உங்களது முதலீடு சார்ந்த புத்தகங்கள் மற்றும் பத்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். அவை எங்கே இருக்கின்றன என்பது குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்.

*உங்கள் குடும்பத்திற்கென்று ஒரு நிதி ஆலோசகரை வைத்துக்கொள்ளுங்கள். நம்பகமான,விஷயம் தெரிந்த ஒரு நபரால் உங்களது வருமானம் சரியான நேரத்தில் சரியான இடத்தில் முதலீடு செய்யப்படும்.

கடைசியாய் ஒன்று…

ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறையும் உங்களது முதலீடு மற்றும் வருமானம் சார்ந்த தகவல்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

 -பாலாஜி.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *