கோவையில் முதலீட்டுத் திருவிழா

டை-கோவை அமைப்பு நடத்தும் முதலீட்டுத்திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. புதிய தொழில் முனைவோருக்கான நிதிதிரட்டலுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு நடக்கிறது.

 

 

class

பி.எஸ்.ஜி  கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான ஸ்டெப், கொங்கு பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்ப அடைகாப்பகம், சென்னை ஏஞ்சல்ஸ், மதுரையைச் சேர்ந்த நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க் ஆகிய அமைப்புகள் சேர்ந்து நடத்து இந்நிகழ்வில் மொத்தம் 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 

 

 

அவை பல கட்டங்களாகப் பரிசீலிக்கப்பட்டு, நிறைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இன்று பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் முதலீட்டாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவர்.

 

அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர், அடுத்த கட்டமாக பல கட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு முதலீட்டைப்பெறுவர்.

 

இறுதி கட்ட கலந்தாய்வில் மொத்தம் 150 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

carnival

அவர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள டை அமைப்பின்மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது.  நிறைவாகவே இந்த முதலீட்டாளர் சந்திப்பு  நடத்தப்படுகிறது.  அதிகபட்சமாக ரூ.3 கோடிவரை முதலீட்டைப்பெற தொழில்முனைவோருக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

 

-அருண்மொழி

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.