டின் நம்பர்: தெரிந்ததும் தெரியாததும்

நீங்கள் ஏதோ ஒரு பொருளை விற்க விரும்புகிறீர்கள். அதற்கு கடை பிடித்து, ஆட்களை நியமித்து சிறிய தொழிலாக அதனைச் செய்ய விரும்புகிறீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு நிச்சயம் வணிகவரித்துறை தரும் உரிமம் தேவை. முன்பு இதனை ஆர். சி நம்பர் என்று சொல்வார்கள் (ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்).

 

தற்போது வாட் வரிவிதிப்பு முறை வந்தபிறகு டின்  நம்பர்  வழங்கப்படுகிறது. இதற்கு – Tax IDENTIFICATION NUMBER  என்பது விரிவாக்கம்.  இது விற்பனை  வரி  செலுத்துவோருக்கான பதிவெண் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

 

உங்கள் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தை அணுகி இந்த எண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். (தற்போது இணையதளம் மூலமாகவே டின் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது).

 

tin number

இந்த உரிமத்தை/எண்ணைப் பெறுவதற்கு உங்களுக்கு ஒரு சொந்த / வாடகை அலுவலகம் , அதில் உங்கள் நிறுவன பெயர் பலகை அவசியம் .  உங்கள் நிறுவனத்திற்கு PAN எண் எடுத்து கொள்ளவேண்டும் . அவ்வளவு தான். உங்கள் நிறுவனத்தைப் பதியலாம் .

 

நீங்கள் விண்ணப்பித்தபிறகு, அந்த முகவரியில் தொழில் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்க வணிகவரித்துறை அதிகாரிகள் வருவர்.

விற்பனை வரி எவ்வளவு?

பொதுவாக 5% , 15%  வரி செலுத்த வேண்டும் . இதில் சில சலுகை , விலக்குகள் உண்டு ..

 

Kirana_shop

ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்குள் விற்பனை செய்யும்  இருக்கும் விற்பனையாளர் நீங்கள் எனில்  உங்களுக்கு டின் நம்பர்  அவசியம் இல்லை.

.
ஓராண்டுக்கு ரூ. 10-50 லட்சம்வரை வர்த்தகம் செய்தால் 0.5 % வரி செலுத்தினால் போதுமானது. ஓராண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனைவருவாய்   உள்ள நிறுவனங்கள் விற்பனை வரி முழுவதும்  செலுத்த  வேண்டும் ,பொருள்களை  பொறுத்து வரி வீதம்  மாறுபடும்.

 

இந்த விஷயம் தெரியாமல் பலர் வரி கட்டி தவிப்பர். விற்பனை வரியை நேராக வணிகவரித்துறை அலுவலகத்துக்குச் சென்றுதான் செலுத்த வேண்டும் என்பதில்லை. இணைய வழியில்கூட செலுத்திக் கொள்ளலாம் . முதல் மாதம் செய்த விற்பனைக்கு அடுத்த மாதம் 20 தேதிக்குள் வரி செலுத்திவிட வேண்டும் .

-ஐயன் கார்த்திகேயன்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

2 thoughts on “டின் நம்பர்: தெரிந்ததும் தெரியாததும்”

  1. Arunbal Srinivasan

    அடேங்கப்பா யார் அந்த ஐயன் கார்த்திகேயன், சூப்பரா எழுதி இருக்காரு…

Leave a Comment

Your email address will not be published.