தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ, (TAMILNADU ADI DRAVIDAR  HOUSING  AND DEVELOPMENT  CORPORATION   LIMITED,TAHDCO) ஆதிதிராவிடர் வகுப்பைச்  சேர்ந்த தொழில் முனைவோருக்குத் தொழில் தொடங்கத் தேவையான உதவியை அளிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 

Tamil-Daily-News_26203119755

குறிப்பாக, பதினெட்டு வயது முதல் அறுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவோர் மேற்சொன்ன நிதிதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

கடைகள் வைப்பது, டிராக்டர், லாரி மற்றும் மினி லாரி,சு ற்றுலாவுக்கு கைகொடுக்கும் வாடகைக் கார், மூன்று சக்கர வாகனமான ஆட்டோ போன்றவற்றை வாங்கி தொழில் செய்வது, இதுதவிர சிறிய அளவிலான பால்பண்ணை, இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சலவைத்தொழில், தையல் மற்றும் காலணிகள்  உருவாக்கும் தொழில் என்று வருமானம் தர உதவும் எந்த ஒரு தொழிலுக்கும் தாட்கோ தேவையான மானியத்தை  வழங்குகிறது.

 

தொழிலைத் தொடங்கத் தேவைப்படும் பணமதிப்பில் 30% அல்லது ரூ.2.15 ல் இலட்சம் – இவ்விரண்டில் எந்தத் தொகை குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

 

money-2696219_640

மானியம் பெற விதிமுறைகள்

மானியத்தைப் பெற விண்ணப்பிப்பவர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

 

தொழில் தொடங்கும் நபருடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மானியத்தைப் பெற விண்ணப்பிக்கும் நபர்  18-65 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

 

எந்தத் தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களோ, அந்தத் தொழில் குறித்த முன் அனுபவம் அவருக்கு இருக்க வேண்டும்.

 

மானியம் பெற விரும்பி விண்ணப்பிக்கும் நபரோ, அல்லது அந்த நபரின் குடும்பத்தினரோ ஏற்கனவே வேறு ஒரு தொழிலுக்காக மானியம் பெற்றிருந்தால் அந்த நபர்,மறுபடியும் மானியம் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

 

 

சில நிபந்தனைகளும் உண்டு

என்ன மாதிரியான தொழில் செய்யலாம் என்பதை விண்ணப்பதாரர்தான் முடிவு செய்யவேண்டும்.

stock-3170020_640 (1)

தொழில் தொடங்கியபிறகு அதற்கு உதவும் வகையில் வாங்கப்படும் கட்டடங்கள், கார் போன்ற சொத்துக்கள் அனைத்தையும் விண்ணப்பதாரர் பெயரில் மட்டும்தான் பதியவேண்டும். வேறு யாரையும் பினாமி போலப் பயன்படுத்தக்கூடாது.

 

விண்ணப்பதார் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்து தனக்கான தொழில் மானியத்தைப் பெறுகிறாரோ அந்த மாவட்டத்தில்தான் தன்னுடைய தொழிலைத் தொடங்கி நடத்தவேண்டும்.

 

எரிவாயு தொழிலுக்கும் இருக்கிறது மானியம்!

 

நாட்டில் தொழில்முனைவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஆதிதிராவிடர்கள் தொழில் துறையில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடனும் சில்லறை வணிக முறையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு தொழில் தொடங்கி நடத்தவும் தாட்கோ மானிய உதவி,மற்றும் கடனுதவி செய்கிறது.

 

இதன் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சில்லறை வணிகம் செய்ய விரும்புவோர் தாட்கோ-வில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் மானியம் வேண்டி விண்ணப்பிக்கிறாரோ,அந்த மாவட்டத்தில் அவர் வசிக்க வேண்டும்.

 

refuel-2157211_640

விண்ணப்பதாரர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

முகமை (agency) எடுத்து நடத்த, எண்ணெய் நிறுவனங்கள் சில தொழில் சார்ந்த தகுதிகளை வகுத்திருக்கின்றன.அந்தத் தகுதிகள் உள்ளவர்களால் மட்டுமே  தாட்கோவில் எரிவாயு சில்லறை வணிகத்திற்கான மானியத்தைப் பெற முடியும்.

-சு.கவிதா

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *