நாட்டின் நம்பர் ஒன் டிடிஎச்: வீடியோகான் வென்றது எப்படி?

 

டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர், மைக்ரோவேவ் அவன் முதலிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனையில் சுமார் முப்பத்தியெட்டு வருடங்களாக இயங்கிவரும் பிரபல நிறுவனம் வீடியோகான் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான்.

 

வேணுகோபால் தூத் என்பவரால் 1979-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் அதன்பிறகு வீடியோகான் டிடிஎச் என்ற பெயரில் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவையிலும், செல்பேசி விற்பனையிலும் 2009-ம் ஆண்டில் கால்பதிக்க ஆரம்பித்தது. மின்னணு சாதன வணிகத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டது வீடியோகான். டிடிஎச் தொழில் அந்நிறுவனத்துக்குப் புதிது.videocon dth

 

துறை புதிதாக இருந்தாலும் இதிலும் தடம் பதித்திருக்கிறது வீடியோகான். ரிலையன்ஸ், சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை போன்ற பெருநிறுவனப்போட்டி கடுமையாக இருந்தாலும் தளரவில்லை. எத்தனையோ சலுகைகளை அவை அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், அத்தனை DTH சேவைகளின் கடுமையான போட்டிகளை சமாளித்து  மக்களின் அமோக  வரவேற்பைப் பெற்றிருக்கிறது வீடியோகான் டிடிஎச்.

 

2009-ல் இந்த வீடியோகான் டிடிஎச் அறிமுகமானது என்று சொன்னோம் இல்லையா! அதன்பிறகு அடுத்த நான்கு ஆண்டுகளில் 1 கோடி சந்தாதாரர்களை இந்த வீடியோகான் தன்வசப்படுத்தியது. சாட்டிலைட் தொலைக்காட்சித் துறையில் உள்ளவர்கள் மத்தியில் வீடியோகானின் இந்த வெற்றி ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும்,கடும்போட்டி நிறைந்த இந்தத் துறையில் எப்படி வீடியோகான் நிறுவனத்தால் இந்த வெற்றியை ருசிக்க முடிந்தது என்பதுவே பலரின் கேள்வியாக இருக்கிறது.

 

இத்தனைக்கும் மற்ற டிடிஎச் சேவை நிறுவனங்களைப் போல வீடியோகான்  விளம்பரங்களை வாரி இறைக்கவில்லை. குறிப்பிட்ட அளவே தன் சேவை குறித்த விளம்பரங்களைக் கொடுத்தது. மற்றபடி வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையைத் தொடர்ந்து வழங்குவது,அதையும் மீறி சேவையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே அதை சரிசெய்வது,போன்ற  வாடிக்கையாளர் சேவை போன்ற விஷயங்களில் வீடியோகான்  டிடிஎச் தனது தனித்தன்மையைக் காட்டியது.

 

இதன் விளைவாக “வீடியோகான் டிடிஎச்  நல்லா இருக்குப்பா…..” என்று வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால்,மிகப் பழைய டெக்னிக்காக கருதப்படும் இந்த  வாய்மொழி விளம்பரங்கள்தான்  வீடியோகான் டிடிஎச் நிறுவனத்துக்கு நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது.

 

குறிப்பாக, வீடியோகான் டிடிஎச் சேவையில் படக்காட்சிகள் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவதாகச் சொல்கிறார்கள் வீடியோகான் வாடிக்கையாளர்கள். அதுமட்டுமல்ல,அதிக எண்ணிகையிலான சேனல்களும் இந்த சேவையில் கிடைக்கின்றன.அதாவது,முன்னூற்றி எழுபத்தியைந்து SD(STANDARD DEFINITION)சேனல்கள் மற்றும் ஐம்பத்தைந்து HD(HIGH DEFINITION) சேனல்கள் என்று வீடியோகான் டிடிஎச் சேவை அற்புதமாக இருகிறது என்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

dish tv

இதுதவிர,அல்ட்ரா HD சேனல்கள்,RADIO  FREQUENCY  REMOTE, D2H AVTIVE போன்ற சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டதாக இந்த வீடியோகான் டிடிஎச் சேவை மக்களுக்குக் கிடைக்கின்றது.கனமழை பெய்யும் காலங்களில்கூட சிக்னலின் வலிமை பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம்.

 

கதையில் இப்போது ஒரு திருப்புமுனை வந்திருக்கிறது. நேர்மறையான திருப்புமுனைதான். வீடியோகான் டிடிஎச்-சின இந்த பிரம்மாண்ட வெற்றியைக் கண்ட மற்றுமொரு சாட்டிலைட் தொலைக்காட்சியான டிஷ் தொலைக்காட்சி இந்த வீடியோகான்  டிடிஎச் நிறுவனத்தின் 55.4 சதவீதப் பங்குகளை வாங்கி,தன்னுடன் வீடியோகான் டிடிஎச் நிறுவனத்தை இணைத்துக்கொண்டிருக்கிறது.

 

இதன்காரணமாக வீடியோகான் டிடிஎச்-சின் வாடிக்கையாளர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அண்மையில் இந்நிறுவனம் தெரிவித்த தகவலின்படி ரூ.1990 கோடிக்கு வணிகம் செய்திருக்கிறது வீடியோகான் டிடிஎச் (2016-17 நிதியாண்டில்). நம்புவீர்களா, இன்று வீடியோகான் டிடிஎச் தான் நாட்டின் நம்பர் ஒன் டிடிஎச் சேவை நிறுவனம். மொத்தம் 2 கோடியே 80 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாக இது பெருமித நடைபோடத் தொடங்கியிருக்கிறது.

 

பகட்டு விளம்பரங்கள்  எதுவும் தேவையில்லை.நாம் செய்கின்ற வேலையை,சரியாக,சிறப்பாக செய்தால் போதும். வெற்றிக் கனியைப் பறித்துவிடலாம் என்பதை உரக்கச் சொல்கிறது வீடியோகான் டிடிஎச்-சின் வெற்றிப்பயணம்!

-சு.கவிதா.

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *