உங்ககிட்ட இந்த 10 இருக்கா?

சொந்தமாகத்தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இல்லாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துவருகிறது. வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற, விழிப்புணர்வும் ஆசையும் மட்டும் போதாது. மாறாக, வேறு சில சிறப்பியல்புகளும் தேவைப்படும்.  அப்படிப்பட்ட 10 சிறப்பியல்புகளைப் பார்ப்போம்!

 

1.துணிச்சல்

continues effort

துணிச்சல் இல்லாதவர்கள் ஒருபோதும் சொந்தத்தொழிலில் இறங்கவோ, வெற்றிபெறவோ முடியாது. நான் இங்கு சொல்வது அசட்டுத் துணிச்சலை அல்ல. நேர்மறையான, புத்திசாலித்தனமான துணிச்சல். இதனை நாம் செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் அதற்கேற்ற புத்திசாலித்தனமும்தான் இங்கு துணிச்சலாக வெளிப்பட வேண்டும்.

 

’ஒருவேளை  தொழிலில் தோற்றுவிட்டால்?’ ; ‘ஒருவேளை நமக்கு நட்டம் வந்துவிட்டால்?’ ‘ ஒருவேளை போட்டியாளர்கள் நம்மை முந்திக்கொண்டுவிட்டால்?’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. யானையும் புலியும் சிங்கமும் நரியும் வாழும் காட்டில்தான் முயலும் மானும் எறும்பும் வாழ்கின்றன. எல்லோருக்கும் சமமான வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை!

 

2.விடாமுயற்சி

 

ஒருமுறை ஒரு சிறிய தோல்வியை, ஏமாற்றத்தைச் சந்தித்துவிட்டால் உடனே ’நான் ஒரு ராசியில்லா ராஜா…நான் என்ன செய்தாலும் அது உருப்படாது. என் தலையெழுத்தே அப்படித்தான்’ என்று சொல்லிப் புலம்புவோர் எண்ணிக்கை கணிசமானது. இப்படிப்பட்டவர்கள், வெற்றி பெற்ற தொழில்முனைவோரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.

 

எவ்வளவு தோல்விகளுக்குப்பிறகு அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பதைப்புரிந்துகொள்ளும்போதுதான் தொழில் வாழ்க்கையின் சூட்சுமங்கள் புரியவரும். அடுத்து என்ன…அடுத்து என்ன என்று யோசிப்பவனுக்கு அழுவதற்கு நேரம் இருக்காது.

 

3.வித்தியாசமான யோசனை

 

new ida

சொந்தத் தொழில் தொடங்க விரும்புவோர் அனைவரிடமும் இருக்க வேண்டிய அதிமுக்கியமான தகுதி இதுதான். வழக்கமான தொழில்களைச் செய்வது, வழக்கமான பாணியில் செய்வது ஆகியவை உங்களை முன்னேற்றாது. புதிய தொழில்களைக் கண்டுபிடியுங்கள். அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலைப் புதுமையாக எப்படி செய்வது என்பது கண்டுபிடியுங்கள்.

 

உங்களுக்கும் போட்டியாளருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லையென்றால் உங்கள் வண்டி ஓடுவது கஷ்டம். What’ s new? என்பதுதான் இன்றைய வணிக உலகின் தாரக மந்திரம்.

 

 

4.சிக்கனம்

 

நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவராக இருந்தால் உங்களது நிதி மேலாண்மை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. எது எப்படி இருந்தாலும் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வந்துவிடும். அப்படி இப்படி ஏதாவது செய்து மாதத்தை ஓட்டிவிடலாம்.

 

ஆனால் நீங்கள் சொந்தத்தொழில் செய்யத்தொடங்கிவிட்டால் கதையேவேறு. உங்கள் வீட்டு வாடகை (அல்லது வீட்டுக்கடன்), அலுவலக வாடகை, ஊழியர் சம்பளம், குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகள், அவசர காலத் தேவைக்கான நிதி, சேமிப்பு என்று எல்லாவற்றுக்கும் நீங்கள் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

 

cost

எனவே தேவையற்ற விருந்துகள், மதுப்பழக்கம், படோடோபம், வெளி உணவுகள் ஆகியவற்றுக்கு உடனடியாக தடா போட்டுவிடவேண்டும். எல்லா செலவுகளையும் குறித்துவைத்துக்கொண்டு, மாத இறுதியில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.  தேவையற்ற செலவுகள் ஏதாவது செய்திருக்கிறோமா என்பதைப்பார்த்து, அப்படி ஏதாவது இருந்தால் அடுத்தாமாதம் அது திரும்ப நிகழாதவண்ணம் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

 

5.கூச்சம் எதற்கு?

 

சிலர் தாங்கள் சொந்தத்தொழில் செய்வதுகுறித்த தகவலையே ஏதோ தங்கமலை ரகசியம்போல காப்பாற்றி வைத்துக்கொண்டிருப்பார்கள். யாராவது அதுகுறித்துக்கேட்டால் மிகுந்த கூச்சத்துடன் ஒப்புக்கொள்வார்கள். இது புதிய தொழில்முனைவோர் அழித்து ஒழிக்க வேண்டிய பழக்கம் என்பேன். நீங்கள் ரகசியமாகத் தொழில் செய்துகொண்டிருந்தால் உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் இருப்பது எப்படித்தெரியுhesitation-300x199ம்?

 

எனவே, எங்கெல்லாம் செல்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் புதிய தொழில் முயற்சி குறித்து தாரளமாகப் பேசுங்கள்.

அங்கு உங்களுக்கு முதலீடு கிடைக்கலாம், வாடிக்கையாளர் கிடைக்கலாம், விலை மதிப்பற்ற அனுபவ மொழிகள் கிடைக்கலாம், ஆலோசனைகள் கிடைக்கலாம்…இல்லையா!

 

 

6.குண்டுச்சட்டி குதிரையா?

 

volkswagen-569315_960_720

 

’நம்ம ஊருக்குள்ளேயே நாலு காசு பார்த்தா போதும்’ என்று நினைப்பது மிகமிகத் தவறான மனோபாவம். பக்கத்து ஊர் காசு உங்கள் பாக்கெட்டுக்கு வந்தால் கசக்கவா போகிறது? பக்கத்து மாநிலத்தில் உங்கள் அலுவலகம் செயல்பட்டால் பிரமாதமாக இருக்காது? வெளிநாடுகளில் உங்கள் கிளைகள் இருந்தால் கலக்கலாக இருக்குமில்லையா!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவன் தமிழன். எனவே பல ஊர்கள், பல மாநிலங்கள், வெளிநாடுகள் என்று சுற்றியடியுங்கள். உங்களுக்குள் புதிய கதவுகள் திறக்கும்.

புதிய வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர்கள் என்று பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 

 

7.சேர்ந்து முன்னேறுங்கள்!

 

refugees-1020274_1280

உலகத்தில் நீங்கள் மட்டும்தான் சொந்தத்தொழில் செய்யவில்லை இல்லையா! உங்களைப்போல ஏகப்பட்ட பேர் உங்கள் துறையில் சொந்தத்தொழில் செய்வார்கள்தானே! அவர்களோடு ஒரு நல்லுறவைக் கொண்டிருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

உங்கள் துறையில் அன்றாடம் நடக்கும் விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். மேலும் உங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இதுபோன்ற கூட்டுறவு, துறை சார் சங்கத்தில் உறுப்பினராக ஆவது ஆகியவை ரொம்பவே உதவும்.

 

 

8.நிர்வாகத்திறன்:

 

ஒரு நிறுவனத்தில் நல்ல பிள்ளையாக வேலை செய்வது என்பது வேறு. ஆனால் நான்கு பேரை வைத்து வேலை வாங்குவது என்பது வேறு. முதல் விஷயத்துக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். உங்கள் மேலாளர் என்ன சொல்கிறாரோ, அதைக்கேட்டு ‘சபாஷ்!’ வாங்கினாலே போதும்.

 

ஆனால் உங்கள் சொந்தத்தொழிலை நிர்வகிக்கும்போது நீங்கள் உத்தரவிடும் நிலையிலும், உங்கள் ஊழியர்கள் உங்கள் உத்தரவைக்கேட்டு நடக்கும் நிலையிலும் இருப்பார்கள்.

அதுபோன்ற சூழலில் நீங்கள் பணியாளர் நிர்வாகம் எனும் man-1633667_960_720கலையைக் கற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நீங்கள் நகரமுடியும்.

அதேபோல, நிறுவனத்தின் கணக்குவழக்குகளை நிர்வகித்தல், தொழிலை விரிவாக்கம் செய்தல், புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல் என்று எல்லாவற்றுக்கும் நிர்வாகத்திறன் தேவையான ஒன்றாக இருக்கிறது.

எனவே, தொழில் முனைவோர் இந்த நிர்வாகக்கலையைக் கற்றுக்கொண்டு களமிறங்குவது பாதுகாப்பானது. இல்லாவிட்டால் அனுபவம் தரும் விலைகளைக் கொடுத்தபிறகே அதனைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

 

9.புதியன விரும்பு

 

phone-160430__180

தொழில் முனைவோர், எப்போதும் மாற்றங்களுக்குத்தயாராக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பவராக இருப்பது ஒரு முக்கியமான தகுதி.

’வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் தருவோருக்கு கடிதம்தான் அனுப்புவேன், மின்னஞ்சல் அனுப்ப மாட்டேன். கம்ப்யூட்டர் எனக்கு அலர்ஜி’ என்று சொன்னால் தொழில் நடத்த முடியுமா? அது செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறதோ, அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.’ஊரோடு ஒத்து வாழ்’ என்ற பழமொழி நமக்குத்தான் பாஸ்!

 

10.முதலீடு

 

‘என்னடா இது, முதலில் சொல்ல வேண்டியதைக் கடைசியில் சொல்கிறாரே!’ என்று திகைக்கிறீர்களா? என்னைப்பொறுத்தவரை தொழிலில் முதலீடு என்பது முக்கியமான விஷயம்தான். ஆனால் அது மட்டுமே முதன்மையான தகுதி அல்ல. மேலே கண்ட தகுதிகள் உங்களுக்கு இருந்தால் முதலீட்டைத் திரட்ட நீங்கள் அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்காது.

 

-அருண்மொழி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *