கடைசி நேரத்திலும் வரி விலக்குப் பெற ஸ்மார்ட் ஐடியாக்கள்!

வருமானவரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மிகக் மிகக் குறைந்துவிட்டது. இதோ, இன்றோடு சேர்த்து 4 நாட்கள்தான் இருக்கின்றன. ஆனால்,நீங்கள் மனதுவைத்தால்,இப்போதுகூட சில உத்திகளைக் கையாண்டு வருமானவரியில் விலக்குகளைப் பெற முடியும். அப்படிப்பட்ட முத்தான உத்திகள் உங்களுக்காக….

 

1.கைகொடுக்கும் காப்பீடு:tax-468440_640

காலாவதியான பாலிசிகளை நீங்கள் வைத்திருந்தால்,அதை உடனே புதுப்பிக்க இதுவே சரியான நேரம்.உதாரணத்திற்கு உங்களுடைய எதிர்கால நலனுக்காக  இரண்டு பாலிசிக்களை நீங்கள் எடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

அதில் ஒரு பாலிசியை தொடர்ந்து கட்டாமல் பாதியிலேயே விட்டால்,அந்தப் பாலிசி காலாவதியாகி விடும்.அப்படி காலாவதியாகிப்போன பாலிசிக்களை நீங்கள் உடனடியாக புதுப்பியுங்கள்.இதன்மூலமாக உங்களுக்கு வருமானவரியில் விலக்கு கிடைக்கும்.

அதனால்,எல்.ஐ.சி மாதிரியான நிறுவனங்களில் நீங்கள்  பாதியிலேயே கட்டாமல் விட்டுவிட்ட பாலிசிக்கு உடனடியாக உயிர் கொடுங்கள்.வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுங்கள்.

 

2.வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள்:

shopping-cart-604007_640

அதேபோல வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் மியூச்சுவல் பண்டில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை கவனித்து அதில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தும் உங்கள் பணத்தைக் காப்பாற்றலாம்.

ADITYA  BIRLA  SUNLIFE  TAX PLAN,SBI  MAGNUM  TAXGAIN  SCHEME,SUNDARAM  DIVERSIFIED  EQUITY  FUND,TATA  INDIA  TAX  SAVINGS  FUND,RELIANCE  TAXSAVER  FUND(ELSS  FUND) போன்றவை வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் மியூச்சல் பண்ட்களில் குறிப்பிடத்தகுந்தவை. இவற்றில் ஆன்லைன் மூலமாக நீங்கள் இன்வெஸ்ட் செய்யலாம்.

 

3.நன்கொடையில் இரட்டை லாபம்:

நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு.அதனால்,கொடுக்கும் உங்களுக்கு மட்டுமல்ல,அதைப் பெறுபவர்களும் பயனடைவார்கள்.அதனால்,நன்கொடைகள் மூலமாகவும் நீங்கள் வருமான வரியை மிச்சப்படுத்தலாம்.

michelangelo-71282_640இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,எந்தெந்த தொண்டு நிறுவனங்களில் எல்லாம்,நன்கொடைக்கு வருமானவரி விலக்கு உண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ,அந்த நிறுவனங்களில் நன்கொடைகளை அளிப்பது உங்களுக்கும் வருமானவரி விலக்குப் பெற்றுத்தர உதவும்.

 

4.அரசுக்கும் கைகொடுக்கலாம்!

பிரதமரின் தேசியப் பேரிடர் நிவராண நிதி,முதலமைச்சரின் பொது நிவாரண நிதி போன்றவற்றில் வருமான வரி விலக்கு உண்டு.எனவே இதுபோன்றவற்றுக்கு நிதி உதவி அளித்தும்,வருமான வரியிலிருந்து  விலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

 

5.பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு

தபால் நிலையங்களிலும்  அனைத்து வங்கிகளிலும்  சுகன்யா சம்ருதி திட்டம் என்கிற பெண் குழந்தைகளுக்கான திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இந்தத் திட்டம் மூலமாக,அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் வரிவிலக்குப் பெறலாம்.எனவே ஆன்லைன் மூலமாகக் கூட இதில் பணத்தை உடனடியாகச் செலுத்தி வரி விலக்குப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல ,பிபிஎப் எனப்படும் பப்ளிக் பிராவிடன்ட் பண்டில் பணம் கட்டாமல் விட்டிருந்தால், அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை கட்டி வருமான வரி விலக்குப் பெறலாம்.

 

boy-160168_640

6.கல்விக்கட்டண ரசீது இருக்கா?

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளுக்கு நாம் செலுத்தும் கட்டணத்தில் “டியூஷன் பீஸ்” வருமான வரி விலக்குப் பெறக் கைகொடுக்கும்.

எனவே உடனடியாக பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று,”டியூஷன் பீஸ்”-க்கான பில்லைப் பெற்று வருமான வரி விலக்குப் பெறலாம்.

 

7.டேர்ம் பாலிசி எடுத்தாச்சா?

மிக மிக முக்கியமான விஷயம்,நீங்கள் இதுவரை “term insurance policy” எடுக்காமல் இருந்தால்,உடனடியாக எடுத்துவிடுங்கள்.இந்த இன்சூரன்ஸ் பாலிசி தொகை,ஒருவர் இறந்த பிறகு சம்பந்தபட்டவரது குடும்பத்திற்குப் போய்சேரும்.அனைத்து வகையான “term insurance policy”க்கும் வருமானவரி விலக்கு உண்டு என்பதால் www.Policybazaar.com, www.bankBazaar.com போன்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனங்களைப் பயன்படுத்தி “term insurance policy” எடுக்கலாம்.

 

8.படிவம்-16 ஐத் திரும்பப் படியுங்கள்

வருமானவரியைத் தாக்கல் செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் அவரது நிறுவனத்தால் FORM16 கொடுக்கப்படும்.இந்த FORM16-ஐ கவனமாகப் பூர்த்தி செய்யவும். அதில் ஏதேனும் செலவுகள் சேர்க்காமல் விடுபட்டிருந்தால்,அதைக் கட்டாயம் கவனித்து சேர்க்கவும்.  வரிப்பிடித்தம் செய்தபிறகு நீங்கள் விடுபட்டவற்றைக் கண்டறிந்தால் வரி தாக்கல் செய்யும்போது அதனைக்குறிப்பிட்டு வரிச்சலுகைகளைப் பெறமுடியும். ஆனால் அந்த முதலீடு/செலவு நடப்பு நிதியாண்டில் (31-03-2018 வரை மட்டுமே)  மேற்கொள்ளப்பட்டதாக இருக்கவேண்டும். இதன் மூலமும் வருமான வரி விலக்கைப் பெற முடியும்.

 

’இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் இவற்றையெல்லாம் செய்தாக வேண்டுமென்றால் என்ன செய்வது? நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மூடியிருக்குமே!’ என்றெல்லாம் நினைக்காதீர்கள். எல்லாவகையான முதலீடுகள், சேமிப்புகளையும் நீங்கள் இணையம் வழியாகவே செய்ய முடியும்.

-சு.கவிதா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *