காப்பீட்டு முகவராக ஜெயிக்க டாப்-10 ஆலோசனைகள்!!!

நீங்கள் நன்றாகக் கவனித்துப் பாருங்கள்…..பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வேட்கை அதிகம் உள்ள நபர்களில் நிறையப் பேர்  அலுவலக வேலையோடு சேர்த்து பகுதி நேரமாக காப்பீட்டு முகவர் வேலையையும் செய்வார்கள்.

அந்த அளவுக்கு பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் அற்புதமான தொழில் இது. ஆனால் சிலர் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டு “அப்படி ஒண்ணும் இந்த வேலை சுகப்படல…” என்று நழுவிவிடுவதும் உண்டு.

content-marketing-3160470_640

எல்லாமே சுலபமா கிடைச்சிடுமா பாஸ்? கொஞ்சம் மெனக்கெடனும்தானே? அதனால் என்னென்ன செய்தால் வெற்றிகரமான காப்பீட்டு முகவராக பட்டையைக் கிளப்பலாம் என்பது குறித்த ஆலோசனைகளைத் தருகிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

  1. அலுவலகம் செல்வதற்கு எப்படி நேர்த்தியாக உடை அணிவீர்களோ அப்படி வாடிக்கையாளரை சந்திக்கச் செல்லும்போதும் அணிந்துகொள்ளுங்கள். காப்பீட்டு முகவருக்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்க வேண்டாம்.

  1. உங்கள் உடை நீங்கள் உங்கள் தொழிலில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும் கண்ணாடி. இதில் நீங்கள் சரியாக இருந்தால் அடுத்து நீங்கள் பேசும் செய்திகளை வாடிக்கையாளர் காது கொடுத்துக் கேட்க ஆரம்பிப்பார். இது ஒருமாதிரியான உளவியல் அணுகுமுறை என்று கூடச் சொல்லலாம்.

  1. அதேபோல பேச்சில் தெளிவும் பக்குவமும் இருக்கட்டும்.நீங்கள் ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி வாடிக்கையாளரிடம் விளக்க முற்பட்டால் சரியான மொழிநடையைத் தேர்ந்தெடுங்கள். சரியாகப் பேசுங்கள். குறிப்பாக ஈர்க்கும் விதத்தில் பேசுங்கள். சிறுபிள்ளைத்தனமாக எரிச்சலூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிருங்கள்.

  1. அதேபோல ஒருவரிடம் பேச ஆரம்பிக்கும்பொழுதே காப்பீடுத் திட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடக் கூடாது. அந்தக் குறிப்பிட்ட நபரின் விருப்பமான துறைகள், அவர் ஈடுபாடு காட்டும் விஷயங்கள்,அவரது குடும்ப விபரங்கள் போன்றவற்றைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொண்டு அவைகளைப் பற்றி முதலில் இயல்பாகப் பேசுங்கள். அதன் பிறகு இடைச்செருகலாகக் காப்பீட்டுத் திட்டம் பற்றி மெல்ல பேச்சை ஆரம்பிக்கலாம்.

  1. எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. எனவே இந்தக் காப்பீட்டுத் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த முகவர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  அவ்வப்போது அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள். அவர்களின் அனுபவங்கள் உங்கள் துறை சார்ந்த வளர்ச்சிக்கு மிகவும் உதவக் கூடும்.  குறிப்பாக புதிதாக காப்பீட்டு முகவராகக் களம் இறங்குபவர்கள் மூத்த முகவர்கள் அவர்களது வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டியது அவசியம்.
  1. அதுமட்டுமல்ல, வாடிக்கையாளரை சந்திப்பதற்கு முன்னால் அவரிடம் என்ன பேசப் போகிறோம் என்பதை முன்கூட்டியே ஒரு சிறு ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் தேவையில்லாமல் உளற நேரிடும். உங்கள் உளறல் வாடிக்கையாளருக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும்.

  1. ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் பத்து ஆதாயங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவை குறித்த எல்லாவற்றையும் நீங்கள் வாடிக்கையாளரிடம் பத்தி பத்தியாக விளக்கிக்கொண்டிருந்தால் வாடிக்கையாளர் அயர்ச்சியாக உணர்வார். அதற்குப் பதிலாக வாடிக்கையாளரை அதிகம் ஈர்க்கும் சில முக்கிய ஆதாயங்கள் குறித்து எளிமையாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.
  1. காப்பீட்டு முகவருக்கு உடல்மொழி ரொம்பவே முக்கியம். சுறுசுறுப்பாக இருங்கள். துறுதுறுவென செயல்படுங்கள். உங்கள் கண்களில் இருக்கும் உங்கள் தொழில் சார்ந்த நம்பிக்கை ஒளி வாடிக்கையாரையும் தொற்றிக்கொள்ள வேண்டும். காப்பீட்டுத் துறை சார்ந்த சந்தை நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வாருங்கள். எந்தெந்தக் காப்பீடுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது, எவற்silhouette-3378760_640றை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.இவை சார்ந்து உங்கள் தொழிலைக் கொண்டு செல்லுங்கள்.

 

9.தொழில்நுட்ப வளர்ச்சியை உங்கள் தொழிலில் பயன்படுத்துங்கள். முகநூல், வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று             எல்லாவற்றிலும் இயங்குங்கள். அவற்றில் நிறைய நல்ல நட்பு வட்டத்தை உருவாக்குங்கள்.  பிறகு உங்கள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த செய்திகளை அவற்றில் பகிருங்கள். இப்போதெல்லாம் ஒரு தொழில் வளர்ச்சியடைய சமூக ஊடகங்கள்  ரொம்பவே கைகொடுக்கின்றன.

    10.எல்லாவற்றுக்கும் மேலாக எரிச்சலுடன் இந்த வேலையை செய்யவே செய்யாதீர்கள். நீங்கள் கேட்டவுடனேயே  வாடிக்கையாளர்கள் காப்பீடை எடுத்துவிட மாட்டார்கள். உங்களது தொடர் முயற்சி மட்டுமே அவர்களை உங்கள் பக்கம் இழுக்க வைக்கும். அதனால் பொறுமையைக் கைகொள்ள ஒருபோதும் மறவாதீர்கள்.

-சு.கவிதா.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *