கிடைப்பதைப் பிடித்துக்கொள்ளுங்கள்!

வாழ்க்கை, நாம் எதிர்பாராத அதிர்ச்சிகளை மட்டுமல்ல, எதிர்பாராத ஆச்சரியங்களையு
ம் உள்ளடக்கியதுதான். இது தொழில் முனைவோருக்குகு ரொம்பவே பொருந்தும்.

 

பார்த்துப் பார்த்து உருவாக்கிய தொழில் படுத்துவிடுவதும், எதிர்பாராத ஒரு கோணத்திலிருந்து ஒரு வருவாய் வந்து, அது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடுவதையும் தொழில் முனைவோர் பலரும் சந்தித்து இருக்கிறார்கள்.  அதுபோல சில எடுத்துக்காட்டுகளைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

 

உங்களுக்கு பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தைத் தெரியுமில்லையா? உலக அளவில்  திருமண ஏற்பாட்டு இணையதளங்களில் முதலிடம் இருப்பது அதுதான். பல லட்சம் திருமணங்களைச் செய்துவைத்து லிம்கா சாதனைப் புத்தகத்திலும் அது இடம் பெற்றிருக்கிறது. அதன் நிறுவனர் திரு முருகவேல் ஜானகிராமனுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றி ஆனால் தொடக்கத்தில் இந்த வெற்றி தானாக வந்து மடியில் விழவில்லை.

 

AAEAAQAAAAAAAAzIAAAAJDliZWYwMGFhLTE2ODAtNDYwYi05ZWI2LTM3OTRlMmE2NzMxYQ
முருகவேல் ஜானகிராமன்

பாரத் மேட்ரிமோனி உருவான கதை  மிகவும் சுவையானது. முதுநிலை அறிவியல் பட்டதாரியான முருகவேல் ஜானகிராமன், சென்னை, அமெரிக்கா, சிங்கப்பூர் என்று பல்வேறு நாடுகளில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றிவந்தார்.

 

அப்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக  http://sysindia.com/ என்ற  இணையதளத்தைத் தொடங்கினார். பொதுவான செய்திகளை உள்ளடக்கிய அந்த இணையதளத்தில் ஒரு சிறிய இணைப்பாக மணமகள்/மணமகன் தேவை என்ற சொல்லையும் இணைத்திருந்தார். bharath matrimonyஇணைய தளத்திற்கு வந்து மற்ற செய்திகளை படிப்பவர்களைக் காட்டிலும் இந்த மணமாலை இணைப்புக்குச் சென்று திருமண வரன் தகவல்களைப் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் முருகவேல்.

 

’ஏன் இதையே ஒரு தொழிலாக க் கொள்ளக்கூடாது?’ என்று மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. உடனே தொடங்கியதுதான் தமிழ் மேட்ரிமோனி.

 

இன்று ஒவ்வொரு மொழி, ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி திருமண வரன் இணைய தளங்களை இவரது நிறுவனம் நடத்திவருகிறது. உங்களது தொழிலில் ஏதோ ஒரு பிரிவுக்கு சந்தைவாய்ப்பு அமோகமாக இருப்பது தெரியவந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது அந்தப் பிரிவை பிரதானப் பிரிவாக மாற்றிக் கொள்வதுதான். அதனைப் புரிந்து கொண்ட புத்திசாலியான முருகவேல் இன்று கோடிகளைக் குவிக்கிறார்.

 

இதேபோல இன்னொரு கதை. சென்னையைச் சேர்ந்த ஷாசுன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஒரு பிரபலமான மருந்து தயாரிப்பு நிறுவனம். இவர்கள் ஆசைக்காக ஒரு பொழுது போக்கு நிறுவனத்தைத் தொடங்கினர். அந்த நிறுவனத்தின் பெயர் ஃப்ரேம் ஃப்ளோ. இது திரைப்படங்களுக்குத் தேவையான அனிமேஷன்  வேலைகளைச் செய்து தரும் ஒரு சிறிய நிறுவனம். இதில் பணியாற்றிய இளைஞர்கள், துடிப்பும், படைப்பாற்றலும் மிக்கவர்கள்.

 

இந்நிலையில் சோனி நிறுவனம் அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 படத்திற்கான  அனிமேஷன் வேலைகளை செய்து தருவதற்காக இவர்களை பணியமர்த்தியது. நமது ஆட்கள் பின்னிப்பெடலெடுத்துவிட்டார்கள். ஸ்பைடர்மேட் 2 அமோக வெற்றி! துள்ளிக் குதித்தது சோனி. ’இவ்வளவு திறமையான நிறுவனம் நம்முடையதாக இருக்க வேண்டாமோ?’ என்று நினைத்து நேராக சென்னைக்கு வந்த சோனி அதிகாரிகள் சூட்டோபடு சூடாக ஃப்ரேம் ஃப்ளோ  நிறுவனத்தின் 51% பங்குகளை விலைக்கு வாங்கினர். அதனையடுத்து அந்நிறுவனத்தின் பெயர்  சோனி இமேஜ் வொர்க்ஸ் என்று மாற்றப்பட்டது.

The_Amazing_Spider-Man_2_cover

 

மென் இன் பிளாக் 3, தி ஸ்மர்ஃப்ஸ் 2, அலைஸ் இன் ஒண்டர்லேண்ட் முதலிய புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களுக்கான அனிமேஷன் வேலைகளை சோனி இமேஜ் ஒர்க்ஸின் சென்னை அலுவலகம்தான் செய்துகொடுத்தது (தற்போது சென்னை அலுவலக நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுவிட்டன).

 

ஆக, கிடைக்கிற சிறு வாய்ப்பிலும் நீங்கள் அர்பணிப்பு உணர்வோடு செயல்பட்டால், பெரிய பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் என்பதற்கு சோனி இமேஜ் கதையே ஒரு சிறந்த உதாரணம்.

 

இதேபோல எதேச்சையாகக்  கிடைக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் முன்னேற முடியும் என்பதற்கு முருகவேலின் கதை மற்றொரு எடுத்துக்காட்டு.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *