சோஷியல் மீடியா அடிமைகளை ஊழியர்களாக நியமிக்கலாமா?

 

நீங்கள் புதிதாகத் தொழில் தொடங்குகிறவர் எனில் எடுத்தவுடனேயே அதிக ஊழியர்களைப் பணியில் அமர்த்தாதீர்கள். அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம்.

 

opportunity-3185099_640

எனவே ஆரம்பத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணியில் அமர்த்துங்கள்.

 

அதன்பிறகு உங்கள் தொழில் வளர்ச்சி அடைய அடைய அதற்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்.

 

உங்கள் நிறுவனத்திற்கு ஓரளவு அருகில் வசிக்கும் திறமை மிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்துங்கள்.

 

தூர தொலைவில் இருப்பவர்களால் தொடர்ந்து சரியான நேரத்துக்கு அலுவலகம் வர முடியுமா என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. அதனால் ஓரளவு உங்கள் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

 

அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களை சதா பயன்படுத்திக் கொண்டேயிருக்கும்  மனிதர்கள் உங்கள் தொழில்வளர்ச்சிக்கு உதவமாட்டார்கள்.  அதிலும் குறிப்பாக முகநூல்,வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிப்போன மனிதர்களை ஊழியர்களாக நியமிப்பதற்கு முன்னால் கொஞ்சம் யோசியுங்கள்.

 

hiring-1977803_640

குறிப்பாக தொழில்சார்ந்த திறமை தவிர நேர்மை,கண்ணியம், உண்மை போன்ற தனிமனித ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ஊழியர்களைத் தேர்ந்தெடுங்கள்.

 

ஒழுக்கம் சார்ந்த  மதிப்பீடுகள் இல்லாத எந்த ஒரு திறமையும் சரியான வளர்ச்சிக்கு உதவிடாது. ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளைப் போலவே கோபம்,ஏமாற்றம் போன்ற உணர்வுகளை சரியாகக் கையாளும் மனிதரை வேலைக்கு அமர்த்துங்கள்.

 

ஏனென்றால்  எவ்வளவுதான் திறமை இருந்தாலும்  அடிக்கடி உணர்ச்சிவசப்படும் நபர்கள் தொடர்ந்து உங்களோடு வேலை செய்யமாட்டார்கள். உங்களைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போகும் வாய்ப்பும் இருக்கிறது.

 

உங்கள் தொழில் சார்ந்த திறமை உள்ள நபரை வேலைக்கு எடுப்பது முக்கியம்தான். அதே சமயத்தில் துறை சார்ந்த அடுத்தடுத்த உயரங்களைத் தொடவேண்டும் என்கிற வேட்கையும் சம்பந்தப்பட்ட நபரிடம் இருக்கிறதா என்பதனையும் கவனித்து ஊழியர்களைத் தேர்ந்தெடுங்கள்.

 

girl-1064659_640

ஏனென்றால் உத்வேகம் இல்லாத ஊழியர்களை வைத்துக்கொண்டு உங்கள் தொழிலை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டுபோக முடியாது.

 

 

அதேபோல,திறமை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளில் சிறந்து விளங்கும் ஒரு சரியான நபரை உங்கள் தொழிலுக்காகக் கண்டறிந்துவிட்டீர்களா? அப்படியென்றால் உடனடியாக அவரை உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல அவரது வேலைக்கு ஏற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்யுங்கள்.  நீங்கள் தாமதிக்கும் ஓவ்வொரு கணமும் அந்த நபரை உங்கள் தொழில் போட்டியாளர்கள் கொத்திக்கொண்டுபோய்விடுவார்கள். கவனம்!

-ஆதர்ஷ்.  

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *