துணிகர முதலீடு: வெளுத்து வாங்கும் சலவை நிறுவனங்கள்

பரம்பரை பரம்பரையாகத் தொழில் செய்பவர்கள்தாம் வெற்றிபெற்ற  தொழில் முனைவோராக இருக்க முடியும் என்கிற காலம் மலையேறிவிட்டது. எந்தவிதத் தொழில் பின்புலமும் இல்லாமல் புதிதாகக் களத்தில் இறங்கி, சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்திவரும் தொழில் முனைவோர் நம்நாட்டில் பெருகிவிட்டனர்.

 

washing-machine-1889087_640 (1)

அதுமட்டுமல்ல, இதுபோன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்க நிறைய முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

 

குறிப்பாக, சிறப்பாக இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தங்கள் நிறுவனத்தோடு இணைத்துக்கொள்ளவும்  பெரு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

 

அப்படியாப்பட்ட ஒரு புது நிறுவனம்தான் யூ-க்ளீன் (U-CLEAN). துணிகளை சலவை செய்து கொடுப்பது, வீட்டை சுத்தம் செய்து கொடுப்பது போன்றவற்றை செய்துதரும் நிறுவனமான  யூ-க்ளீனுக்கு  ரூ.4கோடி நிதி உதவி கிடைத்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவ் சோப்ரா என்கிற முதலீட்டாளர் இந்த நிதியை நிறுவனத்துக்கு அளித்திருக்கிறார்.

 

laundry-963150_640

அதுமட்டுமல்ல, இந்த யூ-க்ளீன் நிறுவனம்,துணிகளை உலர் சலவை செய்துதரும்  யூ-க்ளீன் செலக்ட் என்ற புதிய பிரிவு ஒன்றையும் தொடங்கியிருக்கிறது.

 

மிகவும் மென்மையான, வேலைப்பாடுகள் நிறைந்த துணிகளை உலர்சலவை செய்யும் தரும் இந்தப் பிரிவுக்கும் நிதி வழங்கியிருக்கிறார் சோப்ரா.

 

2016-ம் ஆண்டில் அருனாப் சின்ஹா என்ற ஐ.ஐ.டி பட்டதாரியால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், தனியுரிமைக் கிளை முறையில் (Franchise) வணிகம் செய்துவருகிறது.

u clean

இதன் காரணமாக, கிட்டத்தட்ட ரூ.6.5 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்தின் நிதி இருந்து வருகிறது.

விரைவில் செல்பேசி செயலிகள் (mobile apps)  மூலமாகவும் தங்கள் சேவையைத் தர இருப்பதாக இதன் நிறுவனர் சின்ஹா கூறியிருக்கிறார்.

 

அதேபோல, புதுதில்லியைச் சேர்ந்த பி.எம்.எல். சொல்யூஷன்ஸ்  என்ற நிறுவனம்  ‘பிக் மை லாண்டரி’ என்ற பெயரில் சலவை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், உலர் சலவைத் தொழிலில் உள்ள  ‘ஒன் க்ளிக் வாஷ்’ என்ற நிறுவனத்தை  அண்மையில் வாங்கியிருக்கிறது.

ironing

 

சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் “WASSUP” என்ற மற்றொரு சலவை நிறுவனம், டோர் மிண்ட் மற்றும் ஈஸீ வாஷ் (EZEE WASH) போன்ற ஸ்டார்ட்-அப் சலவை நிறுவனங்களை  அண்மையில் வாங்கியிருக்கிறது.

 

சலவையை மையமாகக் கொண்ட சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடர்ந்து பிரகாசிக்க மு டியாமல் போனாலும், இத் துறையில் உள்ள புதிய சிறிய  நிறுவனங் களுக்கு நிதி கிடைத்து வருவது, வளரும் தொழில் முனைவோர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

-ராகவன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *