நீட்ஸ் திட்டத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

நீட்ஸ் திட்டத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

தமிழக அரசு, சிறுதொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம்’ (Needs) என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான தொழிற்கடன்பெற இத்திட்டம் உதவுகிறது.

வயது:

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதியன்று 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 வயதைத் தாண்டியிருக்கக்கூடாது. சிறப்புப்பிரிவினர் (மகளிர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்படுத்தப் பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள்) 45 வயதைக் கடந்தவர்களாக இருக்கக்கூடாது.

 

கல்வித்தகுதி:

பட்டம்/பட்டயம்/ஐடிஐ/தொழிற்பயிற்சி பெற்றவர்கள்.

 

இருப்பிடம்:

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசித்திருக்க வேண்டும்.

 

விளிம்புத்தொகை: 

திட்ட மதிப்பீட்டில் 10 விழுக்காட்டை பொதுப்பிரிவினர் முதலீடு செய்ய வேண்டும். சிறப்புப் பிரிவினர் 5 விழுக்காட்டை முதலீடு செய்ய வேண்டும்.

 

மானியம்:

தொழில் திட்ட மதிப்பீட்டில் 25%-ஐ தமிழக அரசு மானியமாக வழங்குகிறது

 

எதற்காக கடன்?: 

தொழிற்கூடம் அமைக்க, நிலம் வாங்க, தொழிற்கூடம் கட்ட, இயந்திர, தளவாடங்கள், உபகரணங்கள் வாங்க

 

பயிற்சி:

தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஒரு மாத கால பயிற்சி அளிக்கும். தொழில் முனைவோர் கூட்டு நிறுவனமாகவும் பதிவு செய்து கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

 

யாரை அணுகுவது?

நீங்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மண்டல இணை இயக்குநர், திரு.வி.க. தொழிற்பேட்டை, சென்னை – 32 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டத் தொழில் மையங்களில் உள்ள பொதுமேலாளர்களை அணுகலாம்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *