மாருதி சுசூகியின் பிஎஸ் 6 தொழில்நுட்ப வாகனம் வந்தாச்சு!

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று தனது சூப்பர் கேரி வாகனத்தின் பிஎஸ்6 சுற்றுச்சூழல் விதிகளுக்குட்பட்டு  எஸ்-சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது.  2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்துடன் தொடர்புடைய அறிமுகமிது.

 

2010இல் சிஎன்ஜி வாகனங்களை மாருதி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பசுமை வாகனங்கள் (சிஎன்ஜி, ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்கள் உள்பட) விற்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இதற்குப் பரவலாக நல்ல வரவேற்பு இருப்பதால், மாருதி சுசூகி தனது ‘மிஷன் க்ரீன் மில்லியன்’ திட்டத்தின் கீழ் அடுத்த இரு ஆண்டுகளில், அடுத்த பத்து லட்சம் பசுமை வாகனங்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

இது அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சந்தையியல்) ஷஷாங்க் ஸ்ரீவாத்சவா கூறுகையில்மிஷன் க்ரீன் மில்லியன் திட்டம் காரணமாக எங்கள் பசுமை வாகனங்களின் வரிசையை இன்னும் வலுப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *