மாருதி சுசூகி வாடிக்கையாளர்களுக்கு புதிய ரிவார்ட்ஸ் திட்டம்

மாருதி சுசூகி வாடிக்கையாளர்களுக்கு புதிய ரிவார்ட்ஸ் திட்டம்

பிரபல மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் இன்று வித்தியாசமான லாயல்டி திட்டமான – மாருதி சுசூகி ரிவார்ட்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.  முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லாயல்டி திட்டம் அரீனா, நெக்ஸா மற்றும் ட்ரூ வேல்யூ அவுட்லெட் தொடங்கி அனைத்துப் பயணிகள் வாகன வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கும்.

மாருதி சுசூகி ரிவார்ட் திட்டம் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாருதி சுசூகி விநியோகஸ்தர்களிடமும்  ஏற்றுக் கொள்ளப்படும்.  வாகனப் பழுது பார்க்கும் சேவை, உதிரிபாகங்கள் வாங்குதல், ஜென்யூயின் பாகங்கள், எக்ஸ்டெண்டெட் வாரண்டி மற்றும் இன்சூரன்ஸ் அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இந்த ரிவார்ட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் – உறுப்பினர், வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் – என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுவர். இத்திட்டட்தில் இணைய கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *