முத்ரா எனும் முத்திரைத் திட்டம்

புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டைத் திரட்டுவதுதான் மிகப்பெரிய சவால். ஏன் அது சdownload (1)வாலாக இருக்கிறது என்றால், வங்கிகளில் தொழில் கடன்களை வாங்குவது சுலபமாக இல்லை என்பதுதான்.

 

சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் தருவதில் முன்னுரிமை தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவுறுத்தினாலும் வங்கிகள் கடன் தர யோசிக்கின்றன.

 

காரணம், பிணையம் இல்லாமல்தான் சிறுதொழில்முனைவோர் தொழில் கடன் கேட்பார்கள். ஆனால் பிணையமில்லாக் கடன் என்பது வங்கியைப்பொறுத்தவரை பாதுகாப்பு இல்லாத கடன்.

 

கடன் கொடுத்தபிறகு பின்னாட்களில் அக்கடன் திரும்ப செலுத்தப்படாவிட்டால் வங்கி மேலாளரின் கழுத்துக்கு கத்தி வந்துவிடும். அவரது ஓய்வூதியம், இதர பணப்பலன்கள் எல்லாவற்றிலும் கைவைத்துவிடுவார்கள். அதனால்தான் நன்கு தெரியாத தொழில்முனைவோருக்கு கடன் தர ரொம்ப யோசிப்பார்கள் வங்கி மேலாளர்கள்.

 

இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டம்தான் முத்ரா வங்கி என்பது. முத்ரா என்பது ஒரு வங்கியல்ல. அது சிறுதொழில் முனைவோருக்கான ஒரு கடன் திட்டம்.

 

இந்த திட்டத்தில் சொத்துப் பிணையம், மூன்றாவது நபர் ஜாமீன் என்று எதுவும் தேவையில்லை என்பதுதான் சிறப்பான விஷயம். மூன்று படிநிலைகளாக முத்ரா கடன் வழங்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று மூன்று நிலைகள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அந்தத் தொகையைக் குறிப்பிட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி, திரும்ப செலுத்திவிட்டீர்கள். அடுத்து ரூ.5 லட்சம் கடனுக்கு குறிவைக்கலாம். இந்த கடனுக்கு தனியாக ஒரு கடன் அட்டை (mudra card) வழங்கப்படும்.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம்பற்றி கேட்டால் பெரும்பாலான வங்கிகளில் பொறுமையாக பதில் சொல்கிறார்கள் என்பதுதான். விண்ணப்பத்தை உடனே தருகிறார்கள். நீங்களும் ஒரு கல் விட்டுப் பாருங்களேன்!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

1 thought on “முத்ரா எனும் முத்திரைத் திட்டம்”

  1. Rathnavel Natarajan

    முத்ரா எனும் முத்திரைத் திட்டம் – இந்த திட்டத்தில் சொத்துப் பிணையம், மூன்றாவது நபர் ஜாமீன் என்று எதுவும் தேவையில்லை என்பதுதான் சிறப்பான விஷயம். மூன்று படிநிலைகளாக முத்ரா கடன் வழங்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று மூன்று நிலைகள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அந்தத் தொகையைக் குறிப்பிட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.- ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த திட்டம்பற்றி கேட்டால் பெரும்பாலான வங்கிகளில் பொறுமையாக பதில் சொல்கிறார்கள் என்பதுதான். விண்ணப்பத்தை உடனே தருகிறார்கள். நீங்களும் ஒரு கல் விட்டுப் பாருங்களேன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *