ரூ.4 லட்சம் to ரூ. 4 கோடி!

இரண்டு வருடத்தில் நான்கு கோடி வர்த்தகம் அதுவும் சில லட்ச முதலீட்டில் !…

 

இது ஏதோ முன்னொரு காலத்தில் , எங்கோ வெளிநாட்டில் நடந்த சாதனை கதை அல்ல!.. நம் தமிழ்நாட்டில்,  கோவில்பட்டியில் நடந்த அல்ல, நடக்கும் கதை !

 

இந்தக் கதையின் நாயகர்கள் தினேஷ், அவரது நண்பர் கோகுல் ஆகியர் இரட்டையர்தாம். பொறியியல் பட்டதாரியான தினேஷ், பட்டம் வாங்கிய கையோடு  தனது சொந்தத் தொழில் கனவை பெற்றோரிடம் தெரிவித்தார். வழக்கமான எதிர்ப்பு!  அதற்காக விட முடியுமா ?

 

”சரி ! உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… ஒரு லட்சம் மட்டும் கொடுங்கள், பாத்துக்குறேன்” என்று கேட்டார்.  பேரம் படிய .. பணமும் கிடைத்தது ..

இனிதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி.

என்ன தொழில் செய்யலாம் ??

[one_half][box type=”custom” color=”#ffffff” bg=”#a34404″ radius=”4″ border=”#870170″]பல கட்ட யோசனைகளுக்குப்பிறகு  கடலை மிட்டாய் தயாரிப்பு என முடிவாகிறது .. தினேஷுடன்  மேலும் மூன்று நண்பர்கள் சேர்கின்றனர் . நான்கு  லட்சத்தில் கனவை செயல்படுத்தத் தொடங்குகிறார். [/box][/one_half]

IMG_0345

 

இடர்ப்பாடுகள் தாண்டிய பயணம் அவர்களுக்கு வாய்க்கிறது. அடுத்து என்ன, உடனே வெற்றிதானே?- என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. தொழில் தொடங்கிய ஆறாவது மாதம் நஷ்டம் .  சின்ன நஷ்டம் எல்லாம்  இல்லை. முதலுக்கே மோசம்.

IMG_0339

ஆசையும், கனவும், உழைப்பும் இருந்தும் தோல்வி. நாமாக இருந்தால் அத்தோடு கனவை மூட்டை கட்டிவிட்டு வேறு வேலை தேடிப் போயிருப்போம். ஆனால் அப்படி செய்ய  தினேஷ் ஒன்றும்  சராசரி ஆள் இல்லை . நான்கு நண்பர்களில் இருவர் விலகிவிட, தினேஷும் இன்னொரு நண்பரும் மட்டும் இணைந்து, மீண்டும் குறைகளைக் களைந்து களம் காண்கின்றனர்.

 

கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் . என்றாலும் இங்கு தயாரிக்கும் மிட்டாய் தயாரிப்புகள் சிலவற்றிலும் குறைகள் இல்லாமல் இல்லை. சுண்ணாம்புத் தூள் , சாக்கரின் ஆகியவையும் உண்டு என்கிறார்கள்.

 

தனது விஷயத்தில் இது நடக்கக்கூடாது என்று  முடிவு செய்தார் . வெல்லம் , ஏலக்காய் என்று சேர்த்து கடலைமிட்டாயின் தரத்தை உயர்த்தினார் . எந்த செயற்கை ரசாயனம் , சுவையூட்டியும் சேர்க்கப்படுவதில்லை .சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக சொல்கிறார்.

 

‘ எந்தப் புத்தகத்தையும்  அதன் அட்டையை வைத்து மதிப்பிடக் கூடாது’ என்பர்.  ஆனால் இன்றைய சர்வதேச போட்டி சூழலில் பொருட்களின் தரத்திற்கு நிகராக அவற்றின் கட்டுமம் ( packing) இருக்க வேண்டும் என்ற விதியைப் புரிந்துகொண்டார் .

 

பேக்கிங்,  டிசைன் என்று  அனைத்திலும் புதுமையை புகுத்தினார். தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு உழைத்தது வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்தது. இன்று அந்த 27 வயது இளைஞன் தினேஷ், ரூ.4 கோடிக்கு  வர்த்தகம் செய்யும் வெற்றிகரமான தொழில் முனைவர் .

 

இன்று சிங்கப்பூர், மலேசியா , அமெரிக்கா, ஸ்ரீலங்கா , மாலத் தீவுகளில் உள்ள தமிழர் நாவிற்கும் இவரது கடலைமிட்டாய் சுவை தருகிறது.

 

சின்ன வயதுமுதல்  நமக்கெல்லாம் தெரிந்த , பழக்கப்பட்ட பண்டம்  கடலைமிட்டாய். கொஞ்சம் மாற்றி யோசித்தால் கடலை மிட்டாயிலும் கோடிகளில் கலக்கலாம் என்பதற்கு தினேஷ் ஓர் எடுத்துக்காட்டு.

 

மாத்தி யோசியுங்க பாஸ்!

 

– ஐயன் கார்த்திகேயன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

1 thought on “ரூ.4 லட்சம் to ரூ. 4 கோடி!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *