லாபம் தரும் மறுசுழற்சித் தொழில்

லாபம் தரும் மறுசுழற்சித் தொழில்

பூமியைக் காப்பதற்கு மட்டுமல்ல, தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் மறுசுழற்சி முறை பயன்படுகிறது. அதனால் என்ன தொழில் செய்யலாம் என்று குழம்பி நிற்பவர்கள் மறுசுழற்சி சார்ந்த தொழில் வாய்ப்புகளைக் கையில் எடுக்கலாம். அப்படி லாபம் தரும் மறுசுழற்சி சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்கள் உங்களுக்காக….

அலுமினியம் கைகொடுக்கும்!

உலகிலேயே அதிக அளவில் மறுசுழற்சி செய்யப்படும் தனிமங்களின் வரிசையில் அலுமினியம் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

எனவே அலுமினியக் கேன்கள் தயாரிப்பது வீட்டு உபயோகத்திற்கான அலுமினியப் பொருட்கள் தயாரிப்பது போன்றவற்றை தொழிலாக எடுத்துச் செய்யலாம். 

பயன்படுத்தப்பட்ட பேட்டரி, கார்பன்,ஆல்கலைன்,துத்தநாகம் போன்ற ஏழு முக்கியப் பொருட்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு பொருளுக்கும் சந்தையில் நல்ல கிராக்கி இருப்பதால் இவற்றை தனித்தனியாக விற்கலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

மின்னணுப் பொருட்களின் கழிவுகள்தான் பூமியை அச்சுறுத்தும் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது. இந்த மின்னணுப் பொருட்களின் கழிவுகளை மறுசுழற்சி முறையில் உபயோகமான பொருட்களாக மாற்றலாம். இப்படி மாற்றுவதால் வருமானம் கிடைப்பதோடு பூமியும் நச்சிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

கண்ணாடி,பிளாஸ்டிக்,உலோகங்கள் போன்றவற்றை இந்த மின்னணுக் கழிவுகளிலிருந்து மறுசுழற்சி முறையில் பெறமுடியும். இப்படிப் பொருட்களைப் பிரித்தெடுக்க அதிக அளவு பொருட்செலவு தேவைப்படாத எளிமையான முறை பயன்படுத்தப்படுவதால் நல்லதொரு லாபம் தரும் தொழிலாக இது பார்க்கப்படுகிறது.

பழைய தொழில், ஆனாலும் செய்யலாம்!

சுற்றுச்சூழலை சீர்கெடுக்காத மற்றொரு தொழில் காகிதம் தயாரிப்பது. காகிதம் தயாரிப்பதற்காக புதிதாக ஒரு மரத்தை வெட்டாமல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் காகிதத்தை மறுசுழற்சி முறையில்புதிதான காகிதமாக உருவாக்கலாம்.

டயர் உங்களை தொழில்முனைவோர் ஆக்கும் பாஸ்!

வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர் கூட நல்லதொரு தொழில் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தித் தரக்கூடும். குறிப்பாக டயர்களில் இருக்கும் ரப்பர் கூட்டுப் பொருட்கள், இரும்பு வயர்கள்,இயற்கை,செயற்கை இழைகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

தூக்கி எறியாதீர்கள் பொம்மைகளை!

குழந்தைகள் வேகமாக வளர்ந்துவிடுவார்கள். எனவே குழந்தைகள் பயன்படுத்திய  துணிகளை முறையாகவும்,சுகாதாரமாகவும் சுத்தம் செய்து விற்கலாம்.

அதுமட்டுமல்ல குழந்தைகள் பயன்படுத்திய பொம்மைகள்,புத்தகங்களைக் கூட புதுப்பித்து விற்பனை செய்யலாம்.

மரத்துக்கு எப்போதும் மதிப்பு உண்டு!

கட்டுமானப் பணிகள்,தொழிற்சாலைகள் போன்றவற்றில் மரத்தின் பயன்பாடு இருக்கும். இதுபோன்ற இடங்களில் வீணாகும் மரக்கட்டைகளைக் கொண்டு பொருட்களைத் தயாரித்து விற்கலாம்.

எலக்ட்ரிக் வயரிலும் வாய்ப்பு இருக்கிறது!

எலக்ட்ரிக் வயரும் உங்களை தொழில் முனைவோராக மாற்றும்.எப்படி என்கிறீர்களா?

பொதுவாக எலக்ட்ரிக் வயர்கள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த எலக்ட்ரிக் வயர்களிலிருந்து தாமிரம், அலுமினியத்தை மறுசுழற்சி முறையில் தனியே பிரித்தெடுத்து விற்கலாம்.

-திருமாமகள்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *