வேண்டாமே போதை……

தொழில் முனைவோர் என்றால் அவர்களுக்கு கடுமையான வேலைப்பளு இருக்கும். தொடர் வேலைகள் காரணமாக மனஅழுத்தம் ஏற்படும்.

 

 

இதிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள புகை,மது போன்ற பழக்கங்கள் உதவும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால்,போதைப்பழக்கங்கள் உடல், மன நலத்தை சீர்குலைத்துவிடும் என்பதைப் பலர் உணருவதேயில்லை.

 

 

நேரத்தோடு உறங்கி நேரத்தோடு எழுந்திருப்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த செயல். ஆனால், தொழில் முனைவோரில் பலர் தொழில் ரீதியில் நடக்கிறது என்று நள்ளிரவு கேளிக்கை விருந்துகளில் கலந்துகொண்டு புகைத்து, மது அருந்தி தாமதமாக வீடு திரும்புகின்றனர்.

alcohol-3194824_640

 

தொடர்ந்த இதுபோன்ற செயல்களின் காரணமாக உடல் நலம் பாழாவதோடு மட்டுமல்லாமல் ஓய்வின்மை காரணமாக கவனமுடன் செயலாற்றும் திறனும் அவர்களுக்குள் குறைய ஆரம்பிக்கிறது.

 

 

அதுமட்டுமல்ல, பல தொழில்முனைவோர் மனஅழுத்தம் இருப்பது போல உணர்ந்தாலே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி போதைதரும் பாக்கு,சிகரெட்,மது போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும்பொழுது, எப்பொழுதுமே படபடப்பாக இருப்பதுபோன்ற உணர்வுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

 

 

விளைவு கோபம்,சிடுசிடுப்பு,எதையும் நிதானமாக அணுகமுடியாத இயல்பு போன்ற எதிர்மறை குணங்கள் இவர்களுக்குள் வளர ஆரம்பித்துவிடுகின்றன.

 

cigarette-3288363_640

தொழில் முனைவோராக மாறுவதற்கு முன்பு எந்தவிதக் கெட்டபழக்கமும் இல்லாமல் வாழும் சிலர் தொழிலை ஆரம்பித்த உடனேயே புகைக்க,மது அருந்தப் பழகிக்கொண்டு விடுகின்றனர்.

 

ஏனென்று கேட்டால், “இவையெல்லாம் தொழில்முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள். இந்த மாதிரியான இயல்புகள்தான் இந்த சமூகத்தில் தொழில்முனைவோருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தரும்” என்று வாதிடுகின்றனர்.

 

ஆனால், இந்தப் பழக்கங்களுக்கும் தொழிலில் முன்னேறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.நம்முடைய திறமையும்,உழைப்பும் மட்டுமே நம்மைத் தொழிலில் உயர்த்தும் என்பதை தொழில்முனைவோர் மனதில் கொள்ள வேண்டும்.

 

தொழில்முனைவோருக்கு உண்டாகும் மனஅழுத்தம், கோபம் முதலிய உணர்வுகளை, அவர்கள் நேர்வழியில் கையாள வேண்டுமே தவிர. மது,சிகரெட் போன்ற தவறான வழிகளைக் கைகொள்ளக்கூடாது.

 

home-2831253_640

இதற்கு பதிலாக மனஅமைதியைப் பெற யோகா (குறிப்பாக மூச்சுப் பயிற்சிகள்), தியானம்) போன்ற வழிமுறைகளைப் பின்பற்றலாம். இவை போன்ற பயிற்சிகள் சூழ்நிலைகளைப் பதட்டமின்றிக் கையாளும் அமைதியான மனநிலையைத் தருவதோடு நல்ல உறக்கத்தையும் தரும்.

 

அதுமட்டுமல்ல சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிப்பது,எந்தவிதக் கூச்சமுமின்றி துள்ளல் இசைக்கு நடனம் ஆடுவது, குழந்தைகளோடு குழந்தையாய் ஆடிப் பாடிக் களிப்பது என்று மனதின் சுமைகளை மாற்றுவழியில் கூட இறக்கி வைக்கலாம்.

-பாலாஜி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *