ஹைதராபாத்தை அதிரவைத்த ஐகியா!

ஹைதராபாத்தை அதிரவைத்த ஐகியா!

மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், சமையலறை சாதனங்கள் போன்றவற்றை சில்லறை வணிகத்தில் விற்கும் ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான “ஐகியா”(IKEA) தனது காலை இந்தியாவில் வைத்திருக்கிறது.

இந்த ஐகியா நிறுவனத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அறைகலன்கள் மற்றும் அவை சார்ந்த  சில்லறை வணிகத்தில் அந்த நிறுவனம் ஒரு ஜாம்பவான்.

ஸ்வீடன் நாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்கள் மறக்காமல் அங்கிருக்கும் “ஐகியா” கடைகளுக்குச் சென்று குறைந்தபட்சம் பீலர் (PEELER) என்று சொல்லப்படும் பழங்கள் தோல் சீவும் சாதனத்தையாவது வாங்காமல் திரும்பமாட்டார்கள். அந்த அளவுக்கு தரத்தில் மிகப் புகழ் பெற்றது இந்த நிறுவனம்.

அதனால்தான் உலகம் முழுக்க இருபத்தியைந்து நாடுகளில் 276 கடைகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல  1.25  பில்லியன் வாடிக்கையாளர்கள்  இந்த நிறுவனத்துக்கு இருக்கிறார்கள்.

நீண்டகாலமாகவே இந்தியாவுக்கு ஐகியா இப்போது வந்துவிடும் அப்போது வந்துவிடும் என்று சொல்லப்பட்ட நிலையில் ஒருவழியாக ஐகியா நிறுவனம் இந்தியாவில் ஹைதராபாத்தில் தனது முதல் கடையை கடந்த அண்மையில் திறந்துள்ளது.

ரூ.1000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கடை 4 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

7500 வகையான பொருட்கள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பொருட்களின் குறைந்தபட்ச விலை ரூ.200க்கும் குறைவாக இருப்பது இந்தக் கடையின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

அதனாலேயே  கடை திறக்கப்பட்ட முதல் நாளான வியாழனன்று ஹைதராபாத் நகரமே ஸ்தம்பித்துப் போனது. மக்கள் கூட்டம் மொத்தமும் ஐகியா கடையின் வாசலில் காலை ஒன்பது மணிக்கே குழுமிவிட்டது.

பத்து மணிக்குக் கடை திறந்ததும் ஒருவருக்கு ஒருவர் இடித்துக்கொண்டும் பிடித்துக்கொண்டும் மக்கள் கூட்டம் கடலென கடைக்குள் புகுந்துவிட்டனர்.

ஆரம்பித்த முதல் நாளிலேயே  இந்தக் கடையின் வணிகம், எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய  வெற்றியை அடைந்திருக்கிறது.

இந்தியர்கள் பொதுவாக வரவேற்பறை, சமையலறை சாதனங்களை ரசித்து ரசித்து வாங்க விரும்புவர். அவர்களது மனவோட்டத்தின் அடிப்படையில் நாங்கள் எங்களது வியாபாரத்தை திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் மேலும் இருபத்தைந்து கடைகளை இந்தியா முழுக்க நிறுவவேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்கிறது ஐகியா.

வருக…வருக!

-திருமாமகள்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *