ரத்த தானம் செய்யப்போறீங்களா? இதை கவனியுங்க!

ரத்த தானம் செய்யப்போறீங்களா? இதை கவனியுங்க!

நாடு முழுவதிலும் லட்சக்கணக்கில் பெருகிவரும் கொரொனா நோய்த்தொற்று, தேசத்தையே உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கிறது.  உயிர் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள்,  தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கொரொனாவின் இரண்டாவது அலையை எதிர்த்துப்போராடிக்கொண்டிருக்கின்றனர். நமக்குத் துணைநிற்கின்றனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கித்தருவதுமுதல் பண உதவி அளிப்பது, ரத்த தானம் செய்வது, பிளாஸ்மா தானம்  என்று தன்னார்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

நீங்களும் பொது நோக்கோடு ரத்த தானம் (குருதிக்கொடை) செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை கோவி ஷீல்டு, கோவாக்ஸின் போன்ற கொரொனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத்திட்டமிட்டிருந்தால் கவனிக்க வேண்டிய விஷயம் இது. தடுப்பூசி போட்டுக்கொண்டபின்  1 மாதத்துக்குப்பிறகே ரத்த தானம் செய்ய இயலும் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இரத்த வங்கிகளில் ரத்த சேகரிப்பு, இருப்பு ஆகியவை குறையும் இல்லையா! இது பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பெரிய இடைஞ்சலாக அமைந்துவிடும். அவர்களுக்கு இரத்தம் கிடைக்காமல் போக நேரும்.

Image by mohamed Hassan from Pixabay

எனவே, ’ரத்த தானம் செய்தபிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என்பதுதான் வல்லுநர்கள் வைக்கும் வேண்டுகோள் ஆகும். தனி நபர்கள், ரத்த தானக் குழுக்கள், ரசிகர் மன்றங்கள், பொது அமைப்புகள் ஆகியோர் உடனடியாக க்ழுவாகச் சென்று ரத்த தான முகாம்களில் ரத்தம் கொடுக்கலாம். அருகில் உள்ள மருத்துவமனைகளை அழைத்தும் ரத்த வங்கிகளைத் தொடர்பு கொண்டும் ரத்த தானம் செய்துவிடலாம். பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இதுவரை ரத்த தானம் செய்யாதவராக இருந்தாலும் இம்முறை ரத்த தானம் செய்துவிடுங்களேன். தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறைபோல ரத்தத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை நாம் மறக்கக்கூடாது.

-தமிழ்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *