பேட்டரி விற்பனை முகவர் ஆகணுமா?

பேட்டரி விற்பனை முகவர் ஆகணுமா?

இந்தியாவில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக  கவுதம் சோலார் கம்பெனி என்கிற பிரபல சோலார் விளக்குகள் தயாரிப்பு நிறுவனம் இயங்கிவருகிறது.

ஆண்டுதோறும் சுமார் ரூ.200கோடி அளவுக்கு இந்த நிறுவனம் தொழில் செய்துவருகிறது. இது இந்திய அரசின் தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனமாகும்.  வடஇந்தியாவில் பல அரசு டெண்டர்களைப் பெற்று, அதன் மூலமாக சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் தெரு விளக்குகளை அமைத்துக் கொடுப்பது போன்ற பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின்  சகோதர நிறுவனமான  கேலோ எனர்ஜி பிரைவேட் லிமிடெட்(GALO ENERGY PRIVATE LIMITED) இன்வெர்ட்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் இயங்குவதற்குத்  தேவையான லித்தியம் மற்றும் லெட் ஆசிட்(LEAD  ACID) பேட்டரி வகைகளை வட இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

“ வடஇந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் இந்தத் தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் எங்கள் நிறுவனம் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இந்தத் தொழிலுக்கான விற்பனை முகவர்களை(டீலர்கள்) நியமிக்க எங்கள்  நிறுவனம் முடிவு செய்திருக்கிறது” என்கிறார் இந்த நிறுவனத்தின் விற்பனைப் பொறியாளரான  காஷிப் ஜமால்.

“சந்தையில்  நிறைய பேட்டரி தயாரிப்புகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்பொழுது கேலோ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த பேட்டரிகள் அதிலிருந்து எவ்விதம் மேம்பட்டதாக இருக்கிறது?” என்று ஜமாலிடம் கேட்டோம்.

பேட்டரிகளைப் பொறுத்தவரையில் எங்களிடம் லித்தியம், லெட் ஆசிட்(LEAD  ACID) ஆகியவை இருக்கின்றன. இன்வெர்ட்டரை வாங்குகின்ற மக்களின் மிக முக்கிய எதிர்பார்ப்பு பேட்டரி நீடித்து உழைக்கவேண்டும் என்பதுதான். மக்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எங்களது பேட்டரிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

எங்களுடைய பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தில் ஒரு பி.சி.பி(printed circuit board ) பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பி.சி.பி-யானது , குறைந்த மற்றும் அதிக மின்னழுத்தப் பிரச்னைகள்,பேட்டரி அதிகமாக சூடாகுவது,ஷார்ட் சார்க்யூட் ஆகிய பாதிப்புகளில் இருந்து பேட்டரியைக் காப்பாற்றி, பேட்டரி நீடித்து உழைப்பதற்கு உதவி செய்யும்.

அதேபோல லித்தியம் பேட்டரிகளுக்கு பராமரிப்பு அவசியமில்லை. லெட் ஆசிட் பேட்டரிகளுக்கான பராமரிப்புகளை நாங்கள் பரிந்துரைப்போம்.

இந்த பேட்டரிகளுக்கு வாரண்ட்டி உண்டா? வேறு ஏதேனும் சிறப்பம்சங்கள் இருக்கிறதா?

நாங்கள் எங்களுடைய அனைத்து வகையான பேட்டரிகளுக்கும் இரண்டு முதல் மூன்று வருட வாரண்ட்டி வழங்குகிறோம். குறைந்தபட்சம் ரூ.15,000 விலையிலிருந்து எங்களது பேட்டரிகள் இருக்கின்றன. உங்களுடைய வீட்டின் மின் தேவைகளைப் பொறுத்து பேட்டரியின் வகைகள் மற்றும் விலைகள் மாறுபடும்.

“நம்முடைய வீட்டிற்கு எந்த பேட்டரியைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் உங்களுக்கு இருக்குமானால் உங்களுக்குக் கைகொடுக்கவும் நாங்கள் இருக்கிறோம்.  எங்களுடைய தொழில்நுட்ப வல்லுனர்கள் உங்களுடைய வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் அளவை ஆராய்ந்து,அதற்கேற்ற  பேட்டரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க உதவி செய்வார்கள்.

தற்போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் சேமிக்கும்  முறை பிரபலமாகி வருகிறது. எனவே வீட்டு உபயோகத்திற்குத் தேவையான சோலார் பேட்டரிகளையும்,சோலார் மின்விசிறிகள், சோலார் விளக்குகளையும் கூட நாங்கள் விற்பனை செய்கிறோம்.

உங்கள் நிறுவனத்தில் பேட்டரி டீலர்ஷிப்பை எடுக்க என்ன செய்யவேண்டும்?

எங்கள் நிறுவனத்தின் விற்பனை முகவராக வேண்டுமென்றால்  ரூ.4-5 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். எடுத்துக்காட்டாக,  ஒருவர் ரூ.5 லட்சம் செலுத்தி எங்களது தயாரிப்புகளுக்கான விற்பனை முகவரானால் அவருக்கு தோராயமாக  நான்கரை லட்சம் மதிப்புள்ள பேட்டரி தயாரிப்புகள்  கொடுக்கப்படும். மீதமுள்ள தொகைஅந்த நபர் எடுத்திருக்கும் டீலர்ஷிப் பகுதியின் சந்தைப்படுத்தல், விளம்பர   செலவுகளுக்காகப் பயன்ப்படுத்தப்படும்” என்கிறார் காஷிப் ஜமால்.

பேட்டரி முகவராக விரும்பினால், தொடர்புக்கு:

காஷிஃப் ஜமால்:  7827934166 .மின்னஞ்சல்: info@galo.co.in

-கோபாலா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *