”நான் அப்படிச் சொல்லவில்லை” -அமித் ஷா.

”நான் அப்படிச் சொல்லவில்லை” -அமித் ஷா.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் அது நமக்கான உலக அளவிலான அடையாளமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார் உள் துறை அமைச்சர் அமித் ஷா.

அதனையடுத்து நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தன. தி.மு.க. முதலிய கட்சிகள் போராட்ட அறைகூவலும் வெளியிட்டிருந்தன.

அமித் ஷா

இந்நிலையில் தற்போது அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்: “நான், இந்தி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்பது நல்லது. அது இந்தி மொழியாக இருக்கலாமே என்றுதான் கூறினேன். நானே இந்தி பேசாத மாநிலத்துக்காரன்தானே!” என்று சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து ‘ஒரே மொழி’ , ‘தேசிய மொழி’ சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருப்பினும் கூடுதலாக மொழிகளைக் கற்பது அவசியம் என்ற கருத்தில் அவர் உட்பட நாட்டின் அனைத்து தலைவர்களும் ஒரே கோட்டில் நிற்கின்றனர்.

தொழில் முனைவோருக்கு இது மிக மிகப் பொருந்தும். எத்தனை மொழிகளை கூடுதலாகக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஏனென்றால் ஒவ்வொரு மொழியும் ஒரு புது உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு புதிய சந்தை.

-அருண்மொழி.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *