எலெக்ட்ரிக் கார் வரியை இந்தியா குறைக்கவேண்டும்-மதன் கெளரிக்கு விடையளித்த இலான் மஸ்க்

எலெக்ட்ரிக் கார் வரியை இந்தியா குறைக்கவேண்டும்-மதன் கெளரிக்கு விடையளித்த இலான் மஸ்க்

”இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு அபரிமிதமான வரி விதிக்கப்படுகிறது. இது, பெட்ரோல்-டீசல் கார்களுக்கு இணையாக இருக்கிறது” என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் இலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

பிரபல யூ டியூப் ஆளுமையான மதன் கெளரி, பல்வேறு விஷயங்கள் தொடர்பான காணொளிகளை தினசரி பதிவேற்றி வருகிறார். இதனையடுத்து அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் உருவாகியுள்ளனர். பொது அறிவை வளர்க்கும் வண்ணம் புதுப்புது செய்திகளை இணையத்தின் உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து வாசகர்களுடன் பகிர்வது அவரது பாணியாகும்.

Image by Iván Jesus Rojas from Pixabay

இவர், அண்மையில் புகழ்பெற்ற அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் இலான் மஸ்க் அவர்களுக்கு ட்விட்டரில் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.

அதில், “இந்தியாவில் டெஸ்லாவின் மின்சாரக் கார்கள் எப்போது அறிமுகமாகும்?” என்று கேட்டிருந்தார்.

இதற்கு மறுமொழி வர வாய்ப்பில்லை என்று மதன் கெளரி நினைத்திருந்தாராம். ஆனால் வியக்கத்தக்க வகையில் இலான் மஸ்க் அவர்களிடமிருந்து விடை வந்திருக்கிறது.

இலான் மஸ்க்-அவர்களின் ட்வீட்

“எங்களுக்கும் டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆசைதான். ஆனால் இறக்குமதி வரி, இந்தியாவில் அதிகம். அதாவது, உலகிலேயே மிக அதிகம். பெட்ரோ, டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் வரியே இவ்வகை வாகனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இவ்வாறு இருந்தால் பசுமை இலக்குகளை எப்படி இந்தியாவால் அடைய முடியும்?” என்று அவர் மறுமொழியிட்டிருந்தார்.

 

மேலும், “இருப்பினும் தற்காலிகமாக வரிகள் குறைக்கப்படும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால் நாங்கள் நிச்சயம் வரவேற்போம்” என்றும் கூறியிருந்தார்.

இந்த விடை தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக மதன் கெளரி தனது யூ டியூப் சானலில்  ((https://www.youtube.com/watch?v=5bJqqXkLT9A) தெரிவித்திருக்கிறார். நமது வரி விதிப்பு முறை, பசுமை இலக்குகள் குறித்த சர்வதேச அளவிலான உரையாடல் உருவாவதற்கு மதன் கெளரி தொடக்கப்புள்ளியாக ஆகியிருக்கிறார். அவரை முனைவு, மனதாரப் பாராட்டுகிறது

மதன் கெளரி

அதேவேளையில், மாற்று எரியாற்றல் தொடர்பான தயாரிப்புகளுக்கான வரிக்கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை நமது ஆட்சியாளர்களுக்கு சொல்லும் வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலையைத் தொடங்க தமிழக அரசு உதவ வேண்டும். இதன்மூலம் மாற்று எரியாற்றலால் இயங்கும் வாகனங்கள் நமக்குக் கிடைப்பதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கும்.

தமிழ்நாட்டின் முதல்வரும் மாண்புமிகு தொழில் துறை அமைச்ச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களும் இந்த சூழலை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி, டெஸ்லா போன்ற மாற்று எரிபொருள் வாகன நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

முத்தமிழ்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *