டான்சிம் அமைப்பின் தலைவரானார் சிவராஜா!

டான்சிம் அமைப்பின் தலைவரானார் சிவராஜா!

தமிழ்நாட்டில் தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் இன்னோவேஷன் மிஷன்’ அமைப்பு.

தமிழக அரசுத்துறையான இது, புதிய தொழில்முனைவோரைக் கண்டறிவது, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவது, புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டைப்பெற்றுத்தருவது, புதிய தொழில்நுட்பங்களை சிறு தொழில் துறைக்குள் கொண்டுவருவது  என்று பன்முக நோக்கம் கொண்டதாகும்.

இதன் தலைமைச் செயல் அலுவலராக திரு.சிவராஜா ராமநாதன் அவர்களை நியமித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அவர், இன்று அப்பொறுப்பே ஏற்றுக்கொண்டார்.  சிவரஜா, நேட்டிவ் லீட் என்ற பெயரில் தென் தமிழக புத்தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டும் அமைப்பை வெற்றிகரமாக நடத்திவருகிறார். அவ்வமைப்பின்மூலம் 500க்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவோருக்கு இவ்வமைப்பு உதவியிருக்கிறது.

பலருக்கும் முதலீடுகளைப் பெற்றுத்தந்துவருகிறது. கிளப் ஹவுஸ் உள்ளிட்ட நவீன சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக தொழில் முனைவோருடன் உரையாடி, அவர்களுக்குத் தோள் கொடுத்து வருகிறார் சிவராஜா. அவருக்குப் பொருத்தமான பதவியை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தொழில் முனைவோர் பலரும் தெரிவுத்துவருகின்றனர்.

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.