உள்ளூர் கடையில் பொருள் வாங்க ஊபர் புது வசதி

உள்ளூர் கடையில் பொருள் வாங்க ஊபர் புது வசதி

 ஊபர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய  ‘ஊபர் கனெக்ட்’ சரக்கு விநியோக சேவையைத் தற்போது கோவை உள்ளிட்ட 13  நகரங்களுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை மற்றவர்களுக்கு அனுப்பவும், பெறவும் முடியும்.  நகர எல்லைகளுக்குள் கடைகளிலிருந்து பொருள்களை வாங்கிக்கொள்ளவும் முடியும்.

விரிவாக்கம்

அடுத்தகட்டமாக, அகமதாபாத், லக்னோ, புவனேஸ்வர், போபால், இந்தூர், மைசூர், பாட்னா, கோடா, விஜயவாடா, விசாகப்பட்டினம், லூதியானா, நாசிக் மற்றும் மும்பை உள்ளிட்ட 25 நகரங்களுக்குப் புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது.

Image by <a href="https://pixabay.com/users/Msaeedsalem-5655159/?utm_source=link-attribution&utm_medium=referral&utm_campaign=image&utm_content=2484376">Mohammed Salem</a> from <a href="https://pixabay.com/?utm_source=link-attribution&utm_medium=referral&utm_campaign=image&utm_content=2484376">Pixabay</a>

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை அடுத்து இச்சேவை, கொல்கத்தா, ஜெய்பூர், குவாஹத்தி, கோர்கான், தில்லி, ஐதராபாத், சென்னை, சண்டிகர், நோய்டா, பெங்களூரு, புனே உள்ளிட்ட 11  நகரங்களில் இந்நிறுவனத்தாஅல் தொடங்கப்பட்டது.

நிபந்தனைகள்

இதில் அனுப்பப்படும் சிப்பங்கள் அனைத்தும்  5 கிலோ எடைக்குக் குறைவாக, பாதுகாப்பாக, முத்திரையிடப்பட்டு, இரு சக்கர வாகனத்தில் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.  மதுபானம், போதை மருந்துகள், அபாயகரமான, தடை விதிக்கப்பட்ட மற்றும் சட்டத்துக்குப் புறம்பான பொருள்களை எடுத்துச் செல்ல  அனுமதி இல்லை.

ஆர்டர் செய்த பொருள் வரும் வழித்தடத்தைக் கண்காணிக்கவும் வசதி உண்டு. அருகாமைக் கடைகளிலிருந்து பொருள் வாங்க இதே சேவையை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஊபர் செயலியைப் பயன்படுத்தியே இந்த சேவையைப் பெற முடியும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *