எஸ்.பி.ஐ கடன் அட்டை, ஆக்ஸிஸ் வங்கிகள் சலுகை அறிவிப்பு!

எஸ்.பி.ஐ கடன் அட்டை, ஆக்ஸிஸ் வங்கிகள் சலுகை அறிவிப்பு!

எஸ்.பி.ஐ கடன் அட்டை நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியிருக்கிறது. பில் செலுத்தும் காலத்தை மார்ச் இறுதிவரை நீட்டித்திருப்பதாக அச்செய்தியில் சொல்லியிருக்கிறது.

(தற்போது ரிசர்வ் வங்கி, கடன் தவணை அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது).

கூடுதல் தகவல்களை https://www.sbicard.com/…/…/covid-19-regulatory-package.page என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

இச்செய்தி கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் அடுத்த போட்டியாளரான ஹெ.ச்.டி.எஃப்.சி கடன் அட்டையும் சலுகைகளை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆக்ஸிஸ் வங்கி, தனது பல்வேறு தரப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கும் 3 மாத தவணை செலுத்துவதிலிருந்து கால நீட்டிப்பு அளிக்கும் வசதியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள், ஆக்சிஸ் வங்கியின் இணையதளத்துக்குச் சென்று தங்கள் செல்பேசி எண்ணைப் பதிவிட வேண்டும்.

 

பின்னர் அவ்வெண்ணுக்கு ஒரு கடவுச்சொல் வரும். அதனை இணையதளத்தில் பதிவிட்டால் போதுமானது. உடனே, உங்கள் விண்ணப்பம் வங்கிக்குச் சென்றுவிடும். விண்ணப்பம், பரிசீலிக்கப்பட்ட விபரம் குறுஞ்செய்தியாக உங்களுக்கு வந்துவிடும்.

கூடுதல் தகவல்களை https://www.axisbank.com/avail-moratorium-on-bank-emi?cta=myoffer-first-moratorium-banner என்ற இணையதள இணைப்பில் காணலாம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.