சபாஷ் ஜொமேட்டோ!

சபாஷ் ஜொமேட்டோ!

 கணவன், மனைவி ஆகிய இருவரும் பணிக்குச் செல்லும் கட்டாயம் உள்ள குடும்பங்களில் ஹோட்டல் உணவு என்பது தவிர்க்க இயலாத ஒரு விஷயம் ஆகிவிட்டது. அதானல் உணவகங்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் போக்கு அதிகரிக்கிறது.

  இது சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தொழிலை வணிகரீதியாக பாருங்கள் ஏகப்பட்ட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் விஷயமாக இருக்கிறது இது.

 

ஊபர் ஈட்ஸ், ஜோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் பணியை செய்து வருகின்றன. நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் கடுமையான போட்டி இருக்கிறது அதனால்தான்  உணவக நிறுவனங்களில் பேசி தள்ளுபடியை பெற்று அதனை வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் அளிக்கின்றனர்.

 எனவே நேரடியாக உணவகத்துக்குச் சென்று உணவு உண்ணும்போது கொடுக்கும் விலையை விட  வீட்டுக்கு வரவழைக்கும்பொழுது உணவின் விலை கணிசமாக குறைகிறது.

இது சிக்கனமான ஒரு முறையாக இருப்பதால் பலரும் பக்கத்து தெருவில் உள்ள உணவகத்துக்குச் செல்வதைக்கூட தவிர்த்துவிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

 

 தொழில் போட்டி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொழில் அறங்களை ஒரு நிறுவனம் பின்பற்றும் பொழுதுதான் அது மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறது. அந்த வரிசையில் இப்பொழுது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது ஜொமேட்டோ.

நடந்த விஷயம் இதுதான்:  ஜபல்பூர் என்ற ஊரில் உள்ள அமித் சுக்லா  என்ற நபர் ஜொமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். பணமும் செலுத்தியாயிற்று. குறித்த நேரத்தில் ஜொமேட்டோ ஊழியர் அந்த உணவை கொண்டுபோய் இவரிடம் கொடுத்திருக்கிறார்.

 ஆனால் அந்த உணவைப் பெற்றுக்கொள்ள அமித் மறுத்துவிட்டார். என்ன காரணம்?  உணவை டெலிவரி செய்தவர் ஒரு முஸ்லிம். அவரது பெயர் ஃபயாஸ் கான்.

ஒரு முஸ்லிம் கையால் உணவை வாங்கி சாப்பிட தனக்கு விருப்பமில்லை என்று சொன்ன அமித் உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு இந்து அல்லாத ஊழியர் மூலம் கொடுக்கப்படும் உணவை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் வேறு ஊழியரை அனுப்ப முடியுமா என்றும் கேட்டிருக்கிறார்.

 அதேபோல ட்விட்டரில் போய் என்னுடைய உணவை யார் தனக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கேட்க உரிமை தனக்கு இருக்கிறதா இல்லையா என்றும் எழுதி இருக்கிறார். இப்பொழுதுதான் கதையில் ஒரு திருப்புமுனை. உடனடியாக ட்விட்டரில் அதற்கு பதில் கொடுத்தது. என்ன பதில் தெரியுமா?

 

‘ உணவுக்கு என்று குறிப்பிட்ட மதம் எதுவும் கிடையாது ஏனென்றால் உணவே பெரிய மதம் தான்’.

 அத்துடன் நிற்காமல் எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறு ஒரு ஊழியரை அனுப்பி அருக்கு உணவு அளிக்கவும் அது தயாராக இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது மேலும் ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைவர்  டுவிட்டரில் தொடர்ந்து எழுதுகிறார்” 

“ பன்முகத்தன்மை மிகுந்த இந்த இந்திய நாட்டின் வர்த்தகர்கள் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.  இதைக் கேள்விக்குள்ளாக்குகிறவர்களின் வணிகத்தை இழப்பதில் எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை” என்று எழுதினார் நறுக்குத் தெறித்தாற்போல!

 உடனடியாக இந்த பதிவுகள் பரவ ஆரம்பித்து இணைய உலகைக் கலக்கத் தொடங்கியிருக்கின்றன.  இந்த நிறுவனம் உணவுக்காக பிரபலமானது என்பது ஒரு பக்கம் இருக்க அது தற்போது சமயசார்பின்மைக்கும் பன்முகத்தன்மை மதிப்பளித்து செய்த இந்த செயலை பார்த்து நாடே பாராட்டி தள்ளிக் கொண்டிருக்கிறது.

 உண்மைதான்… நீங்கள் வணிகம் செய்கிறீர்களா வேலை பார்க்கிறீர்களா என்பதெல்லாம் முக்கியமில்லை ஒரு மனிதனை மனிதனாக மட்டுமே உங்களால் பார்க்க முடிகிறதா என்பதுதான் முக்கியம் அந்த வகையில் ஜெமேட்டோ உயர்ந்து நிற்கிறது.

 வாழ்த்துக்கள் ஜோமேட்டோ!

-அருண்மொழி.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *