வருக… வருக… புத்தாண்டே!

வருக… வருக… புத்தாண்டே!

அன்பு நண்பர்களே,

2020 ஆம் ஆண்டு பல்வேறு சோதனைகளை மனிதகுலத்துக்கே கொடுத்துவிட்டது. கொரொனா பெருந்தொற்று, நமது வாழ்க்கையை, பொருளாதாரத்தை, தொழில்களை நசுக்கிவிட்டது. மெல்ல மெல்ல தளர்வுகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ரயில், பேருந்துப் போக்குவரத்தும் தொடங்கியாயிற்று. இனி மெல்ல மெல்ல நாமும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம்.

கடும் நெருக்கடியைச் சந்தித்த தொழில் துறை 2021 ஆம் ஆண்டில், கொஞ்சம் கொஞ்சமாக மீளூம் என்று எதிர்பார்க்கலாம்.

பெருந்தொழில்கள் ஒருபுறமிருக்க, சிறு-குறு-நடுத்தரத்தொழில்களின் நிலைதான் 2020ல் மிகவும் பரிதாபம். சரக்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்ட சூழலில் மூலப்பொருட்கள் இல்லாமல் உற்பத்தித்துறை மிகவும் சுணங்கிவிட்டது. தற்போது நிலைமை பரவாயில்லை.

Image by Gerd Altmann from Pixabay

இந்த சூழலிலும் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தவை மருத்துவம், மருந்து உற்பத்தி, கிருமி நாசினி தயாரிப்பு, முகக்கவசம், சானிட்டைசர் தயாரிப்பு, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவைதாம். அதேநேரத்தில் தேநீர்க்கடைகள்முதல் உணவகங்கள்வரை பொருளாதார பின்புலமற்ற பலரும் தங்கள் தொழிலகங்களை மூடிய சூழலையும் பார்த்தோம்.

நண்பர்களே, இயற்கைச் சீற்றங்கள் பலவற்றையும் தாண்டியே மனித சமூகம் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. எனவே, கொரொனாவும் கடந்துபோகும். இயல்பு வாழ்க்கை திரும்பும்.

2021 இதற்கெல்லாம் கட்டியம் கூறும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

-முனைவு குழு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.