‘நவரசா’வுக்கு வரவேற்பு. மகிழ்ச்சியில் படக்குழு.

‘நவரசா’வுக்கு வரவேற்பு. மகிழ்ச்சியில் படக்குழு.

அண்மையில் நெட்ஃபிளிக்ஸ்   தளத்தில் வெளியாகியுள்ள  “நவரசா” ஆந்தாலஜி தொடருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த முயற்சியாக அது உருவாக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவர்.  இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர்  தளத்தில் முதல் 10 இடத்தில்  உள்ளது.

இயக்குநர் மணிரத்னம் பற்றும் முக்கிய படைப்பாளி  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் ஆகியோர்  இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

மனித  உணர்வுkஅளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகியவற்றைக் கொண்டு  ஒன்பது வெவ்வேறு  கதைகளைக் கூறும்  ஆந்தாலஜி தொடராக, இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் இதில் பங்களித்துள்ளனர்.

இத்தொடரின் உலகளாவிய வெற்றி மற்றும் பெரும் வரவேற்பு குறித்து இயக்குநர் மணிரத்னம் பற்றும் படைப்பாளி  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் ஆகியோர் பேசும்போது,

”நவரசா-  தொடருக்குக் கிடைத்து வரும் பெரும் வரவேற்பு, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், எல்லைகளை கடந்து  பல  நாடுகளிலும் இத்தொடர் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் 10 இடத்தில் இது   உள்ளது.  இந்தத் தொடருக்கான பார்வையாளர்களில் 40% பேர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்தவர்களே.

இயக்குநர் மணிரத்னம் (படம்:ட்விட்டர்)

இத்தொடரின் உட்கருத்து தமிழில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததில்,  நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். முன்னனி நட்சத்திரங்கள் மற்றும் படப்பாளிகளுடன் இணைந்து உருவாக்கிய இப்படைப்பு அற்புதமான பயணமாக இருந்தது.  இதில் எங்களுக்கு  மிகப்பெரும் மகிழ்ச்சி” என்றனர்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.