அந்தநாள் மில்க் பிகிஸ், திரும்பவும் வருகிறது.

அந்தநாள் மில்க் பிகிஸ், திரும்பவும் வருகிறது.

கடந்த 1980-90களில் பிறந்த, வளர்ந்த, பள்ளிப்பருவத்தை எட்டிய எவராலும் மறக்க முடியாத உணவுப்பண்டம் என்றால் அது, பிரிட்டானியாவின் மில்க் பிகிஸ் பிஸ்கெட்கள்தாம். நான் எனது சிறு வயதில் என் தங்கையிடம் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “நான் காசு சேர்த்து, 5 ஆம் வகுப்பு போகிறபோது உனக்கு பிரிட்டானியா பிஸ்கெட் வாங்கித்தரேன்” என்ற வாக்குறுதிதான் அது. அதன்பிறகு எவ்வளவோ வாங்கித்தந்திருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதுதான் உண்மை. அப்படி, எதிர்காலக் கனவுகளில் ஒன்றாக ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை ஒரு வணிகப்பெயர் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தியிருந்தது. அதுதான் பிரிட்டானியாவின் வெற்றியின் ரகசியம். பால் பாட்டில் வடிவத்தில் பிஸ்கெட்களை அடுக்கியிருக்கும் படம்தான் எல்லா பாக்கெட்களிலும் இடம்பெற்றிருக்கும்.

கால மாற்றத்துக்கேற்ப மில்க் பிகிஸ், பல்வேறு வடிவங்களை மாற்றியிருக்கிறது. இந்நிலையில், பழைய வடிவில் மில்க் பிகிஸைக் கொண்டு வாருங்கள் என்று அதன் சுவைஞர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். #BringBackMilkBikis என்ற ஹேஷ்டேக் இதற்காக உருவாக்கப்பட்டது. #MyMilkBikisMemories என்ற ஹேஷ்டேகிலும் இணையவாசிகள் தங்களது கிளாசிக் மில்க் பிகிஸ் அதே வடித்தில் திரும்பவும் கொண்டுவரப்படவேண்டும் என்று கோரினர்.

இதனையடுத்து மில்க் பிகிஸ் கிளாஸிக் மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரிட்டானியா அறிவித்துள்ளது. 65 கிராம் எடையுள்ள மில்க் பிகிஸ், ரூ.10க்கு விற்கப்பட உள்ளது. இதற்காக தீவிரப்பிரச்சாரத்தையும் அந்நிறுவனம் முன்னெடுத்துவருகிறது.

-அருண்மொழி

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *