இரண்டாவது வருமானம் முக்கியம் மக்களே….

இரண்டாவது வருமானம் முக்கியம் மக்களே….

அவரவர்க்கு துறை சார்ந்த வருமானத்தை தவிர, நேர்மையான வழிகளில் இரண்டாவது வருமானம் என்பதுவும்  நிலையாக வந்துகொண்டிருக்கவேண்டும்.

அப்போதுதான் துறை சார்ந்த வேலை ஒருவரைக் கைவிட்டாலும்,அந்த இரண்டாவது வருமானம் சம்பந்தப்பட்ட நபரை இக்கட்டிலிருந்து காப்பாற்றும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

அதுமட்டுமல்ல, ரிட்டயர்மென்ட் எனப்படும் பணி ஓய்வுக் காலத்தை எந்தவிதப் பதட்டமும்,வருத்தமும் இல்லாமல் நகர்த்த இந்த இரண்டாவது வருமானம் கைகொடுக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை மனதில் வைத்துக்கொண்டுதான் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் துறையைச் சாராத பலவற்றில் முதலீடு செய்து இரண்டாவது வருமானத்தைப் பார்க்கிறார்கள். அப்படி பல்வேறு முதலீடுகள் மூலமாக  இரண்டாவது வருமானம் பார்க்கின்ற பிரபலங்கள் குறித்து அறியலாமா?

விளம்பர நடிப்பு தவிர மற்ற விஷயங்கள் மூலமாக இரண்டாவது வருமானம் பார்ப்பதில் கில்லாடியாக இருக்கிறார் விராட் கோலி. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது இவருக்குப் பிடித்தமான விஷயம் என்பதால் சைஸல் (Chisel) என்கிற பெயரில் பிட்னெஸ்  மையங்களை இந்தியா முழுக்க ஆரம்பித்திருக்கிறார்.

 ஃபேஷன் துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. அதனால்  “ONE 8” என்கிற பெயரில் ஆண்களுக்கான உள்ளாடைகள், இரவு நேர உடைகள், சாக்ஸ் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழிலையும் நடத்தி வருகிறார்.

உணவுத் தொழில் நூறு விழுக்காடு லாபம் தரும் தொழில் என்பதை உணர்ந்தாதலேயோ என்னவோ டெல்லியில் நுயிவா (Nueva) என்கிற உணவகத்தையும் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் நடத்தி வருகிறார்.

சிறப்பான தென் அமெரிக்க உணவுகள் கிடைக்கின்ற உணவகமாக இது இருப்பதால்,மக்களின் மத்தியில் இந்த உணவகம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இவைதவிர பேஷன், விளையாட்டு, ஸ்டார்ட்-அப்…..என்று கோலியின் தொழில் முதலீடு பார்ப்பவர்களை வாய் பிளக்க வைப்பதாக இருக்கிறது.

கிரிக்கெட் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் கிரிக்கெட் தவிர உணவகம், ஆடை வியாபாரம் போன்ற தொழில்களில் முதலீடு செய்து அதில் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

தெலுங்குத் திரையுலக சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனாவும் திரைப்படங்கள்,விளம்பரங்கள் தவிர தொழில் முதலீடுகளிலும் கவனம் செலுத்துகிறார்.

ஹைதராபாத்தில் இருக்கும் இவரது “N Convention centre”-ல்  பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்சிகள் நடக்கின்றன. இதுதவிர உணவகத் தொழிலும் நாகார்ஜுனா முதலீடு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நடிகர் சூர்யா நடிப்பு தவிர காற்றாலைத் தொழிலும் முதலீடு செய்திருக்கிறார். நடிகர் ஆர்யாவும் தொழில் விஷயத்தில் சளைத்தவரில்லை. சென்னை அண்ணா நகரில் “sea  shell” என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

நடிகர் பிரசாந்த் ஒரு சிறந்த தொழில் முதலீட்டாளராக இருக்கிறார். சென்னையில் இவரது Prashanth Real Gold Tower என்கிற பிரம்மாண்ட கட்டடம் இயங்கி வருகிறது.  

கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளரான அனிருத் சென்னை ஆழ்வார்பேட்டையில் Summer House Eatery என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார்.

காஜல் அகர்வால், தனது சகோதரி நிஷா அகர்வாலுடன்.

நடிகை காஜல் அகர்வால் தனது சகோதரியுடன் இணைந்து “மர்சாலா ஜுவல்லரி” என்கிற பேஷன் ஜுவல்லரி நிறுவனத்தை நடத்துகிறார்.

-பிரபலங்களின்  தொழில் முதலீடுகள் குறித்த மேற்சொன்ன சில தகவல்கள் உங்களை ஆச்சர்யப்படுத்துவதற்காக அல்ல. அவர்களைப் பார்த்து நாமும் எதிர்காலம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமே.

ஆகவே விழித்திடுங்கள். நேர்மையான முறையிலான உங்களது இரண்டாவது வருமானத்துக்கு வழி பார்த்திடுங்கள்.   

பாலா.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on google
Google+
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *