லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள்மீது அறப்போர் இயக்கம், தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொடுத்துள்ள சொத்துக்குவிப்பு புகார்களின் அடிப்படையில் ஊழல் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தலைமைக் கணக்குத்தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மொத்தமாக கேசிபி எஞ்சினியர்ஸ் பத்து நிறுவனங்கள் மீதும் 17  தனி நபர்கள்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனைகளை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திவருகின்றனர். மொத்தம் 53 இடங்களில் சோதனை நடந்துவருகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னக்காம்பட்டி புதூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின்  உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

(நிகழ்ச்சியொன்றில் திரு.எஸ்.பி.வேலுமணி. படம்: நன்றி: அவரது முகநூல் பக்கம்)

தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியது (2014-2018ல் சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களில்) தொடர்பாக இவ்வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.  2014-18ல் கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் உள்ள திரு.எஸ்.பி.வேலுமணியிடம் ஊழல் கண்காணிப்புத்துறை அலுவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.

இதனையொட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, கோடம்பாக்கத்தில் உள்ள கே.சி.பி. எஞ்சினியர்ஸ் நிறுவன கட்டடம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோதனை நடந்துவரும் எஸ்.பி.வேலுமணியின் குனியமுத்தூர் இல்லம், சட்டமன்ற விடுதி ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகிறது.

-தமிழ்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram
Share on xing
XING
Share on email
Email
Share on print
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published.