கண்காட்சி, கருத்தரங்குக்குப் போங்க!

கண்காட்சி, கருத்தரங்குக்குப் போங்க!

தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய முக்கியத்தகுதி, தன்னம்பிக்கை, விடா முயற்சி என்றால் இன்னொரு அடிப்படைத்தகுதி, துறை சார் அறிவை மேம்படுத்திக்கொள்வதும் துறை சார் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதும் ஆகும். 

எவ்வாறு அதனைச் செய்வது? உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் கண்காட்சி, கருத்தரங்குகளில் கலந்துகொள்வதன் மூலமாகத்தான்.

அதுசரி, எங்கு, எந்தக் கண்காட்சி நடக்கிறது என்பதை எப்படித்தெரிந்துகொள்வது? அதற்காகத்தான் இந்தப் பகுதி.

பொழுதுபோகாமல் இருக்கிறதே என்று நாம் எங்கெங்கோ செல்கிறோம். நம் ஏற்றுமதி வாய்ப்புகளை, சொந்தத்தொழில் வாய்ப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் புதிய சந்தை வாய்ப்புகளை அறிந்துகொள்வதற்கும் ஏன் தொழில் கண்காட்சி, கருத்தரங்குகளுக்குச் செல்லக்கூடாது?

நம் நாட்டில் நடக்கும் பல்வேறு தொழில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் கட்டணமின்றிப் பார்க்கும் வகையில்தான் நடத்தப்படுகின்றன. சில பெரிய கண்காட்சிகளில் மட்டும் கட்டணம் உண்டு. அதற்காக நாம் செலவிடுவதும் வீண் அல்ல. முதலீடுதான். 

எனவே, கலக்குங்கள் தொழில் முனைவோரே! 

செல்வீர் எட்டுத்திக்கும். தொழில் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *